பழனி பாலநீதி
நோக்கு நோக்கிப் பார்க்கின் முத்தி.
நோக்கு - உள்நோக்கு; முத்தி -இன்பம், வீடு பேறு. நௌவோ டன்றிப் பௌவம் செல்லேல்.
நௌ - நாவாய், கப்பல்; பெளவம் -கடல்.
பகர வரிசை
பழித்தலை ஒழித்தல் மழித்தலின் நன்று.
மழித்தல் தலையை மழித்துக்கொள்ளுதல்.
பாவலர்க்(கு) அழகு நாவலம் பொருந்தல்.
நாவலம் - நாவன்மை.
பிணையும் கடனும் கணையும் புண்ணும்.
45
பிணை ஒருவர் வாக்குறுதிக்குப் பொறுப்பாளியாக
இருத்தல். கடன்
கடன்படுதல். கணை - அம்பு. பிணை கணை போன்றது. கடன் புண் போன்றது; 'இவ்விரண்டும் தவிர்க என்பது.
பீழை பெருகினும் ஏழைமை பேசேல்.
பீழை - துன்பம்; ஏழைமை வறுமை.
புள்ளொளி கேட்டு வள்ளலை வழுத்து.
புள் - பறவை; புள் ஒலி கேட்கும் பொழுது வைகறை;
வள்ளல் - இறைவன்.
பூசித்தல் அன்றி ஏசித் தூற்றேல்.
-
பூசித்தல் வழிபடுதல்.
பெருமை என்பது வறுமையிற் செம்மை.
ஏழ்மையான நிலையிலும் பெருந்தன்மையாக நடப்பதே
பெருமை.
—
பேயினும் கொடியர் ஓயாப் பெண்டிர்.
ஓயா -ஓயாமல் வசை கூறும்.
பையரும் விருத்தரும் பசிக்கப் புசியேல்.
பையர் - சிறுவர்; விருத்தர் - முதியர்.
பொய்முதல் நான்கும் ஒய்யென விடு.
பொய் முதல் நான்கு - பொய், கொலை, களவு, காமம், ஒய்
என விரைந்து.