46
இளங்குமரனார் தமிழ்வளம் - 32
போர்முகத்(து) அஞ்சல் வீரர்க்(கு) இழுக்கு.
யுத்த களத்தில் பயப்படுவது வீரருக்கு இகழ்ச்சி ஆகும்.
பௌவச் செல்வமும் எவ்வம் படும்.
பௌவச் செல்வமும் எவ்வம் படும்.
பௌவச் செல்வமும் - கடல் போன்ற பெரிய செல்வமும். எவ்வம்படும் -(பிறர்க்குப் பயன் படாமையால்) இழிவுபடும். (102)
மகர வரிசை
மதிவசம் இன்றி விதிவசம் இல்லை.
மதிவசம் இன்றி -(வாழ்வு) மதிவழியால் இல்லாமல். விதிவசம் - விதிவழி.
தீர்தல்
மாறுதல் இன்றித் தேறுதல் இல்லை.
மாறுதல் - மனம் நல் வழியில் மாறுதல்; தேறுதல்-துன்பம்
மிக்கன செய்யின் தக்கன விளையும்.
மிக்கன - செயற்கு அரியன; தக்கன - தகுதியான நன்மைகள். மீறிச் செய்வது காரியம் அல்ல.
—
மீறி - தன் தகுதிக்கு மீறி; காரியம் தகுதியான நன்மைகள். முன்கை நீளிற் பின்கை நீளும்.
நாம் பிறருக்கு உதவினால்தான் பிறரும் நமக்கு உதவுவர்" என்பது.
மூத்தாள் வாழ்க்கை கூற்றெனப் படுமே.
மூத்தாள் - மூதேவி; சோம்பல். கூற்று - இயமன்.
மெல்லெனச் செல்வது கல்லினும் உருவும்.
"மென்மையான சொல்லாலும் செயலாலும் வன்மையான சொல்லையும் செயலையும் வென்று விடலாம்" என்பது
மேதைக்கு அழகு கோது படாமை.
மேதை - அறிவாளி; கோது - (சொற்) குற்றம்.
மைந்தரைப் பெறுதலின் முந்திய பொருளிலை.
முந்திய - முதன்மையான.