உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 32.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

௩. பழனி நீதிநூல்

காப்பு

மதிமுக மைந்தர் மக்கட் கெல்லாம்

துதிமுகன் தொழுதியான் தூக்கினன் குறளே.

-

மதிமுக மைந்தர் கறையிலா நிறைமதி போன்ற முகத்தையுடைய பாலர்; மக்கள் - பெண் மக்கள்; துதிமுகன் - துதிக்கையுடைய முகத்தவனாகிய மூத்த பிள்ளையார்; தூக்கினன் குறளே குறள்யாப்பில் நீதிநூல் சொல்லத் தொடங்கினேன்.

நூல் - அகரவரிசை

அந்தணர்ஓத் தோதி அதிகாலை உச்சியந்தி வந்தனம் செய்தல் வளம்.

ஒத்து - வேதம்; வளம் - வளம் சேர்க்கும்.

ஆதி மனுவின் அரசுரிமை கைக்கொண்டு

(1)

நீதி வழுவாமை நெறி.

நெறி - அரசரின் செங்கோல் முறை

(2)

இம்மை விரும்பி இறுக்காய் மறுமைக்கு

வித்தாம் நிதியை விதை.

இறுக்காய் -கடைப் பிடியாய்.

(3)

ஈட்டுக்(கு) இடராய் இடுக்கண் விளைப்பவனே

காட்டுக்குள் வாழும் களிறு.

-

ஈட்டுக்கு பெருமைக்கு.

உள்ளத்துள் கள்ளம் ஒளித்து மொழிபவனே பள்ளத்துள் தான்மறையும் பாம்பு.

கள்ளம் ஒளித்து - வஞ்சத்தை மறைத்து.

(4)

(5)