பழனி பாலநீதி
ஊரூர்கள் தோறும் உறைந்தே அலைந்தாலும் வேரூன்றி ஓரூர் விழை.
விழை - விரும்பு.
எடுத்துப் புறங்கூறும் ஈனரின் நன்காம்
கடுத்தகம் ஏறும் கடு.
53
(6)
ஈனரின் இழிந்தவரின்; நன்காம் - நன்மையான தாம்; கடுத்து அகம் ஏறும் கடு - கடுமையாய் உள்ளே ஏறும் நஞ்சு. (7)
ஏவியும் செய்யாத ஏழை மதிமக்கள்
சாவி பதரோடு சமன்.
ஏழை மதி - குறைந்த அறிவு; சாவிபதர் - சாவியாகிய பதர்; பதர் - நெல்மணி இல்லாத பொக்கு.
ஐம்பொறியின் ஆட்டம் அடங்க நுதல்வழியின்
வெம்பொறியின் மேவினரே வேந்து.
(8)
ஆட்டம் -அலைக்கழிவு; வெம்பொறியின் - விரும்பத்தக்க சூழ்ச்சியத்தின்; மேவினரே அடைந்தவரே; வேந்து உயர்ந்தோர்.
w
ஒருகாலில் ஒவ்வொன்றாய் ஊதியங்கள் நட்டம் வருமுன்றன் செய்கை வழி.
-
(9)
ஒருகாலில் ஒருபோதில்."உன்றன் செய்கை வழி ஊதியங்கள் நட்டம் வரும்" என்பது.
ஓரமென்(று) உன்னா(து) உளமறியச் செப்புமவன்
வேரறுந்து வீழ்வான் விரைந்து.
(10)
ஓரம் என்று உன்னாது உளம் அறியச் செப்பும் அவன் ஒரு பக்கம் சார்ந்து கூறுதல் என்பதை நினையாது, மனமாரச் சொல்லும் நீதிபதி; வேர் அறுந்து வீழ்வான் - சுற்றம் துணை முதலிய சார்புகள் எல்லாமும் அற்று வேரற்ற மரம் போல் அழிவான்.
ஒளவியம் பேசும் அகங்கார சிந்தையுளான் செவ்வியன் ஆகான் செழித்து.
(11)
ஒளவியம் பொறாமை ; செவ்வியன் நல்லோன்;
www
நடுவுநிலையாளன்.
(12)