உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 32.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58

இளங்குமரனார் தமிழ்வளம் - 32

-

கெளவும் சுணங்கன்போல் கடிக்கும் நாய் போல்; எஞ்ஞான்றும் -எப்பொழுதும்; பிறன் கிழத்தி வீடு வெளவும் - அயலான் மனைவி இருக்கும் வீட்டைப் பற்றிக் கொள்வான்.(43)

சகர வரிசை

சனனம் எடுத்ததனால் சாதகமரம் பின்னும்

சனனம் எடுக்காத சார்பு.

சனனம் - பிறவி; சாதகம் - நன்மை; சார்பு - துணை; “பெற்ற பிறவி, மற்றொரு பிறவி எடுக்காமைக்குத் துணை" என்பது. (44)

சாதி மதக்கொள்கை சாதம் சமைத்தலிவை

பேதத்தால் கிட்டுமோ பீடு?

பேதத்தால் - வேற்றுமையால்; பீடு - பெருமை. (45)

சிக்கனம் செய்தொருவன் சிற்சிலவாய்ச் சேர்ப்பனவும்

விக்கினமங்(கு) இன்மையேல் மேரு.

விக்கினம் அங்கு இன்மையேல் - தடையின்றிச் சேர்த்துக்

கொண்டே வந்தால்.

சீலத்துள் சீலம் சிறந்ததாம் தேற்றத்தைக்

காலந் தவிராமை காப்பு.

சீலத்துள் சீலம்

-

-

(46)

பண்புகளிலெல்லாம் சிறந்த பண்பு;

சிறந்ததாம் தேற்றத்தை சிறப்பாகத் தெளிந்த செயலை; காலம் தவிராமை - காலம் தவறாமல்; காப்பு பேணிச் செய்தல். (47)

சுகத்தொடு துக்கமதம் சூழ்ந்தொன்றாய்க் காணும்

அகத்தாரை எற்றும் பொருட்டு.

சுகத்தொடு துக்கம் மதம்

-

ன்பம் துன்பம் வெறி;

(48)

அகத்தாரை உள்ளன்பரை; எற்றும் -அகற்றும்.

சூதினையும் பல்லுயிர்தன் வாதனையும் செய்யாமல்

சாதனையால் வெல்லுமாம் சாது.

வாதனை - துனபம்; சாதனை - உள்ள உறுதி; சாது - துறவி.

செல்வச் செருக்கால் செயித்தோம் எனப்பின்பும்

வெல்ல நினைத்தலும் வீண், (50)

(49)