உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 33.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வானவில்

கொண்டு வா தண்டியல்

இருவர் உடன் பிறந்தார்.

இருவர்க்குள்ளும் பகை;

இருவர்க்கும் மக்கள் இருந்தனர்;

இருவர் பகையும் மக்களுக்கும் தொற்றியது.

தீராப் பகை; போராய் மூண்டது!

89

பாட்டனார் கட்டிய மடம் - தோப்பு -நந்தவனம் - கிணறு... நிலம் இருந்தன.

பகையால், ஒருவரை ஒருவர் புகவிடாமல் தடுத்து நின்றனர். புதுவன் ஒருவன் புகுந்தான்.

இரு பக்கத்திலும் அவரவர்க்குச் 'சார்பன்' போலப் பேசினான்; இருவர்க்கும் தனித்தனி 'நம்பகன்' ஆனான்!

மடத்தில் இருந்தான்; தோப்பு நிலங்களைக் கண்காணித் தான்! படிப்படியாய் மடத்துப் பொறுப்பை முழுதாக ஏற்றான். வருவாய் பெருகியது; தண்டியல் ‘சாமி'யாய் உலாப்போக வர இருந்தான்.

ஒருநாள் பழைய 'மடத்தவரை' அழைத்தான். "தண்டியலைத் தூக்குங்கள்" என்றான்.

'நாங்கள் கொடுத்த பதவி" என்றனர்.

"ஆம்! ஆம்! உண்மைதான்! நீங்கள் கொடுத்த பதவிதான்! ஆனால், நான் இப்பொழுது பதவியில் இருக்கிறேன்; என் கட்டளைப்படி நடப்பது உங்கள் கடமை என்றான்.

99

அறிவைக் கடன் கொடுத்துவிட்டு 'ஐயோ' என்றால்

ஆவது என்ன?

வாண வேடிக்கை

அன்னைக்குத் தீரா நோய்;

தந்தைக்கு முதுமைத் துயர்;