உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 33.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88

இளங்குமரனார் தமிழ்வளம் - 33

புதுநெறி

எந்த ஒரு புது நெறியாவது சொல்லப்பட்ட உடனே ஏற்றுக் கொள்ளப்பட்டது உண்டா?

-

எத்தனை எதிர்ப்புகள் எத்தனை தடைகள்?

இவற்றை வெற்றி கொண்ட பயன் அன்றோ புதுநெறிப் பொலிவு!

ஒரு புதுநெறி எத்தனை பேர்களின் சொல்லும் செயலும் ஒன்றுபட்ட வாழ்வால் அரும்பியது!

எளிதாகவோ அது முளைத்துக் கிளைத்துத் தழைத்தது? பலர் வாழ்வையும் உழைப்பையும் உடைமையையும் தன்னதாக்கிக் கொண்டு வளர்ந்த வளர்ச்சி அல்லவோ புதுநெறி என்பவை.

ஒரு நகரத்துள் போய் வருகின்ற வழிகளை ஒருவன் திடுமென ஒருநாள் மாற்றியமைத்துவிட்டால், அவ்வழியில் வாடிக்கையாகப் போய் வந்தவர்களுக்கு ஏமாற்றம்! எதிப்பு! திகைப்பு!

எத்தகைய

எவ்வளவுதான் நல்லதெனப் புதுநெறி தோன்றினாலும் பழகிப் போய்விட்ட பழையதை விடுவது எளிதாகிறதா?

முனைந்து நிற்பார்க்கே பழநெறி முட்டுக்கட்டையிடு மெனின் மாறுபட்டார் மனத்தில் எத்தனை எதிர்ப்புகளை - எரிச்சல்களை

உண்டாக்கும்?

அந்த எரிச்சலிலே முட்டும்போது கள்ளி கற்றாழை என்றால் என்ன? தேக்கு சந்தனம் என்றால் என்ன? எல்லாம் ஒப்பே!

அந்தப் பழிப்பிலே முனையும் போது காற்செருப்பு என்றால் என்ன, தலைத் தொப்பி என்றால் என்ன? வேற்றுமை பார்த்துக் கொண்டா செயல் நிகழ்கின்றது!

ஆக்க நெறி என்று பாராட்டப் படுவன வெல்லாம் எத்தனை அழிவு வெறிகளுக்கு ஆளாகியவை என்பதை எண்ணும் போதுதான் அதன் 'விலைமானம்' தெளிவாகும்.