உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 33.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92

இளங்குமரனார் தமிழ்வளம் - 33

அவ்வாறு வரவேற்க நாம் முடிவு செய்துவிட்டால்

போதும்: துன்பம் வராதே! முகத்தைச் சுளித்துக் கொண்டால்

துன்பம் ஓடிப் போகுமா?

ஓடுவதைக் கண்டால் வெருட்டுவதற்குத் ‘தொக்கு’! எதிரிட்டு நின்றால் வெருட்டுவதன்கால் தானே பின்னித் தள்ளாடும்!

ஓடும் நாயையும் வெருட்டும் நாயையும் உலகம் கண்டறியாததா? அடர்த்து வருகிறதா துன்பம்!

அரிமா வெனத் திரும்பிப் பார்

அடங்கி வாலைச் சுருட்டிக்

கால்களுக்கு ஊடே வைத்துக் கொண்டு

ஓட்டமெடுக்கும் துன்புறுத்த வந்த துன்பம்.

உள்ளத்து உடைமை

தடைகள் மாந்தரைத் தாளாளர் ஆக்கும். குறுக்கீடுகள் மாந்தரைக் கோபுரத்தில் சேர்க்கும்.

எதிர்ப்புகள் எல்லாம் ஏற்றம் செய்வன. தாக்குதலே ஊக்கி எழுப்பும் உறுதுணை. அடித்த பந்தே எழும்பும்

அரைத்த சந்தனமே மணக்கும்.

கடித்துச் சுவைக்கவே கரும்பு இனிக்கும்.

காலம் வரவேண்டுமெனக் காலமெல்லாம்

காத்திருந்து என்ன பயன்?

கடுவிசையாய் அடிபட்ட பந்தென எழும்பு. கடமையில் கண் வை.

காலம் உன் கைக்குள் வரும்.

வெற்றி உன் காலடியில் தங்கும்

நீ வீறுடன் ஓட ஓட வெற்றி உன்னொடும்

ஓடி ஓடித் தொடரும்.

அஞ்சி ஓடுபவனைத் தோல்வி குழிக்குள் தள்ளும்.