உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 33.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வானவில்

93

துணிந்து ஓடுபவன், குழிக்குள் விழுந்தாலும், வெற்றி தூக்கி நிறுத்தும்.

வெற்றியும் தோல்வியும் வெளியேயில்லை!

உன்னுள்ளே உள்ள உடைமைகள் அவை.

விரியும் ஆசையால்

வண்டிக்காகக் காத்துக் கிடக்கிறோம்.

"வண்டி நிற்க வேண்டுமே; படிக்கட்டு வரை புளி மூட்டை அடைக்கப்பட்டது போல் வண்டி நிரம்பி வழிகின்றதே! நிற்குமா" என்ற ஐயம்.

-

வண்டி நின்றால் எப்படியும் ஏறிவிட வேண்டுமென, முட்டி மோதி முன்பின், ஆண் பெண், முதுமை இளமை எனப் பாராமல் ஏறும் தவிப்பு!

நிலை.

ஏறி நின்றதும், எந்த இடம் வாய்ப்பு எனத் தேடல் அடுத்த

வாய்த்த இடம் கிடைத்ததும். எந்த இருக்கை காலியாகும் எனக் குறிக் கொண்ட நோக்கம்

இருக்கை இடம் கிடைத்ததும், உள்ளிருக்கை இல்லாமல் ஓரத்து இருக்கை மேல் ஆர்வம்!

ஓரத்து இருக்கை வாய்த்ததும், குலுக்கல் இல்லாமல் செல்லும் வகையில் முன்னே உள் இருக்கைத் தேட்டம்!

அத்தேட்டம் நிறைவேறிய அளவில் ஈரிருக்கையை ஓரிருக்கையாகப் பயன்படுத்திக் கொள்ளும் வேட்கை!

அதற்கும் வாய்த்தால், மூவிருக்கையை ஓரிருக்கையாக்கிக் கொண்டு படுத்துக் கொள்ளும் காதல்!

ஆசைக்குத்தான் உலகே போதாதே?

எத்தனை எழுதினாலும் ஆசையை எழுதி விடவே முடியாதே?

தன்னல ஆசையை அளவிட முடியாது; ஆம்! அத்தன்னல ஆசையை அறவே விடுவதற்கு வழி, அதைப் பொது நலத் தொண்டாக மாற்றுதல்! அப்படி மாற்றி விட்டால் அவர் புகழை, அளவிட முடியாத பெரு நிலையாகும்!