உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 33.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94

இளங்குமரனார் தமிழ்வளம் 33

சிறுமையைப் பெருமையாக மாற்றிக் கொள்வதற்கு இயற்கை தந்த இணையற்ற கொடை 'அவா' என்னும் ஆசை!

பாழும் முரணில் எண்ணாமல் வாழும் அரணில் எண்ணுதல் நலம் அல்லவோ!

இரண்டன் நிறைமை

ஒருவர் கடிகாரம் காட்டும் பொழுதை மற்றொருவர் கடிகாரமும் நொடிப்பொழுதளவு தானும் தவறாமல் காட்டு கிறதா?

ஒருவர் நாடித் துடிப்புக்கும் மற்றொருவர் நாடித் துடிப்புக்கும் எவ்வளவு வேறுபாடு?

ஒருவர் நாச்சுவை போல் மற்றொருவர் நாச்சுவை உண்டோ?

வண்ண விருப்பங்கள்தாம் எத்தனை எத்தனை வண்ணங்கள்? எண்ணங்கள் மட்டும் ஒன்றுபோல இருக்க வேண்டும் என்று எவரும் எண்ணலாமா?

ஒரு தந்தை தாய் பெற்ற பிள்ளைகள் ஒத்த எண்ணங்களே உடையவரா?

உயிரொத்த காதலர் தாமும் ஒரே எண்ணமுடையவரா? தாயும் சேயும் ஓரொத்த குருதியராக -குடலினராக உடலினராக இருந்தும் கொள்ளும் உணர்வில் எத்தனை

வேற்றுமை?

ஒத்த உரிமை அன்பு -நண்புகளிலேயே உள்ளெண்ணங் களில் எத்தனை இடைவெளி?

லாம்!

64

'என் எண்ணமே சரி" என நீ எண்ணிக் கொள்ள

'அதுவே சரி என நானும் எண்ண வேண்டும் என என்னைக் கட்டாயப்படுத்த நீ யார்?

ஒவ்வொரு உயிர்க்கும் உரிமை உணர்வு பிறப்பொடு

வந்தது.

-