உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 33.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வானவில்

95

அப்பிறப்புரிமையைக் கட்டாயத்தால் அழித்து விட

முடியுமா?

நீருக்குக் கீழே இறங்குதலும், தீக்கு மேலே ஏறுதலும் இயல்பாதல் போல், தனித்தனி உணர்வுடையது உயிர்ப் பிறப்பு!

உணர்வில் ஒத்துப்போதல் என்பது கட்டாயத்தால் கண்டிப்பால் அடக்குமுறையால் ஏற்படுவது அன்று.

உணர்வும் உணர்வும், நீரும் நீரும் கலந்தால் போல் கலந்து ஒன்றாகிப் போவது இயல்பு.

எவர் தம்மை இழக்கிறார் என்பது இல்லாமல், இருவரும் தம்மை இழந்து இணையும் இணைவிலே அமைவது அது!

காலமெல்லாம் முயலும் முயற்சி பயனில்லாமல் ஒழிந்து போக ஒரோ ஒரு கண்ணசைவிலே உணர்வு ஒத்து இரண்டற்ற ஒன்றாகிப் போவது இல்லையா?

ஒத்துப்போதல் நீடிக்க வேண்டுமா? ஒருவருள் ஒருவராகி ஒருவருக்கும் ஒருவராகி, ஒன்றாகிப் போக வேண்டும்! கூடுவிட்டுக் கூடு பாயும் ஒன்றன் நிறைமையும் ஒன்றன் வெறுமையும் அன்று இது. இரண்டன் நிறைமையும்

து.

இருவகை ஒப்பு

"ஒன்று யாவர்க்கும் தலை ஒன்று: இரண்டு யாவர்க்கும் கண் இரண்டு"

என்பது குழந்தைப் பாடலுள் ஒன்று.

தலை ஒன்றும், கண் இரண்டும், காது இரண்டும், கை இரண்டும், கால் இரண்டும், பிறவும் - இவ்வாறு எண்ணிக்கை ஒத்துப் போதலால் மாந்தர் ஒத்தவர் ஆகிவிடுவரா?

உலகத்து மாந்தப் பிறவியர் அனைவருக்கும் இவ் வுறுப்புகள் ஒப்பாகத் தானே அமைந்துள்ளன! அவர்கள் அனைவரும் ஒப்பானவர் ஆகிவிடுகின்றனரா?

இவ்வொப்புமையே மாந்தர் ஒப்புமை என்றால், எவர் நல்லார்? எவர் அல்லார்? எவர் பெருமையர்? எவர் சிறுமையர்?