உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 33.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96

இளங்குமரனார் தமிழ்வளம் - 33

உலகில் நல்லார் என மதிக்கிறோமே; போற்றுகிறோமே!

உலகில் அல்லார் என வெறுக்கிறோமே; ஒதுக்குகிறோமே! பெருமையர் இவர் எனப் பேசுகிறோமே!

சிறுமையர் இவர் என ஏசுகின்றோமே!

உறுப்பு ஒப்பு இருப்பினும் இவ்வேறுபாட்டை டை ஏன் காள்கிறோம்?

அவரைப் போலவே இருக்கிறார் எனத்தோற்றம் காண்கிறோமே!

அவரென்றே கருதிவிட்டேன்; நீங்கள் வேறொருவரா? என நமக்கே நம்பமுடியா ஒப்புமைத் தோற்றங்கள் உண்டல்லவோ! 'ஒருவரைப் போலவே உலகில் எழுவர் உண்டு என்று பேசவும் படுகின்றதே!

இத்தகையருள்ளும் நல்லாரும் அல்லாரும், பெருமையரும் சிறுமையரும் கண்டுரைக்கும் அளவுகோல் என்ன?

அவ்வளவுகோல் 'பண்பே' என்கிறது வள்ளுவம்.

"உறுப்பொத்தல் மக்கள்ஒப் பன்றால் வெறுத்தக்க பண்பொத்தல் ஒப்பதாம் ஒப்பு

என்பது அது. 'ஒப்பு' என்றும் 'ஒப்பதாம் ஒப்பு' என்றும், ஒப்பினை இரண்டாக்கிக் கொள்கிறது. தோற்றத்தால் ஒக்கும் உறுப்பு ஒப்பினும், பண்பியல் ஏற்றத்தால் அமையும் ஒப்பே, ஒப்பதாம் ஒப்பு என்று பகுத்துக் காட்டுகிறது.

ஒருவரைக் கண்ட அளவில் எழுந்து நின்று மதிக்கச் செய்வது எது?

எது?

ஒருவரைக் கண்ட அளவில் ஒதுங்கிச் செல்லச் செய்வது

ஒருவரைத் தேடிப் போய் மிதிக்கச் செய்வது எது?

“பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்

கருமமே கட்டளைக் கல்'

""

என்னும் பெருமைச் செயலும் சிறுமைச் செயலுமே அவற்றுக்கு அளவையாக அமைகின்றனவாம்.