உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 33.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வானவில்

அணிலார் செய்கை

வீட்டு முகப்பில் ஓர் ஓட்டுத் தாழ்வாரம்;

தாழ்வாரக் கைவளைக் கம்பின் மேல் ஊர்ந்து சென்றதோர் அணிற்குட்டி; நடக்க அறியா அணிற்குட்டியின் நடுங்கிய கால்கள் இடற

நழுவி வீழ்ந்து கீச்சிட்டது குட்டி;

சுவரில் மாட்டிய கண்ணாடிச் சட்டத் திடையே

மாட்டிக் கொண்டு கூச்சல் இட்டது;

குட்டியின் குரலை எட்டியிருந்து கேட்டன போலும்; இடப்பால் இருந்து தாவி வந்தது இனிய தாய் வலப்பால் இருந்து முட்டிமோதி முனைப்பாய் வந்தது தந்தை!

இரண்டும்கூடி ஏதோ பேசின;

கண்ணாடிச் சட்டக் கயிற்றுவழியே கடிதில் இறங்கின;

குட்டியை இரண்டும் கூடித் தூக்கிக்

கைவளை மேலே கருத்தாய்ச் சேர்த்தன;

குட்டி துயரம் குலைந்து போயது;

தந்தையும் தாயும் கொஞ்சிக் களித்தன;

இன்னதே அன்றோ குடும்பப் பண்பு! குட்டி குரல் தரப் பெட்டையும் ஆணும் பின்னிப் பிணைந்து பெருகிய அன்பால் உதவுதல் தானே உயர்ந்த குடும்பப் பாங்கு| துடிப்போர் தங்கள் துயர்க்குரல் கேட்டுத் துடித்துவந்து உதவுதல் தானே,

உலகக் குடும்பம் உய்தற்காம் வழியே! அணிலார் செய்கை அறிஞர் செய்கையாய் அமைதல் ஆகாதோ?

ஆலமர ஆசான்

ஆடிக்காற்றோ இல்லை;

அசையும் தென்றல் காற்றே அஃது!

107