உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 33.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106

இளங்குமரனார் தமிழ்வளம் - 33

தேடி இரண்டும் விரைந்தன;

கூடும் எழுந்தது; குடியும் புகுந்தன;

தென்றல் காற்றில் மெல்லென அசைந்தது கூடு: தேனிசை பாடி ஊஞ்சல் ஆடின இரண்டும்;

"புளிய மரத்தில் தென்னை போலப்

பொலிவும் அசைவும் உண்டோ?" என்றது பெண்.

'அப்படியா?' என்று அமைந்தது ஆண்;

காலம் கடந்து கடிதில் பறந்தது.

புதிது புதிதாய்த் தென்னையில் குருத்துக் கிளர்ந்தன;

பழைய கீற்றுகள் பழுத்து முதிர்ந்தன;

முற்றிக் காய்ந்து வற்றிப் போயது அடியில் இருந்தகீற்று;

அந்தக் கீற்றும் ஆடிக் காற்றில்

அடியும் முடியும் ஆடி அலறி வீழ்ந்தது;

கூடு பிழைக்குமோ? குடும்பம் தழைக்குமோ? நாணி ஒடுங்கி நலிவு கூர்ந்தது பெண். பிழையை மறந்து பெரிய அன்பைப்

பேணிப்பொழிந்தது ஆண்!

புதிய அறிவு! புதிய வாழ்வு!

புதிய பாட்டுப் பூரிப்போ டெழுந்தது!

கூடு பிரிந்தால் என்ன! - எங்கள்

குடும்பம் பிரியவில்லை.

குடிசை அழிந்தால் என்ன? - எங்கள் குடும்பம் அழியவில்லை!

ஒத்துப் போகத்தெரிந்தோம் - நாங்கள் ஒழித்து போக வில்லை.

முத்துப்போலத் தெரிந்தோம் - அதனை முழுதும் ஏற்றுக் கொண்டோம்!”