உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 33.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வானவில்

ஒவ்வொரு பேரும் ஒற்றுமையாக

உழைத்த போதுதான் உலகம் உய்யும்; இதோ:

அணைத்த நானே ஆவியைத் தருவேன்;

நானில்லை என்றால், தீயும் பற்றுமோ?

105

தீயில்லை என்றால், திரியும் எரியுமோ?

மெழுகும் உருகுமோ? சுடரும் பொழியுமோ?

ஆதலால், ஒன்றாய்க் கூடி உழைப்போம்;

உலகம் வாழ வாழ்வோம்! மூன்றும் மொழிந்தன:

"நல்லதே நவின்றாய் காற்றே!

நானெனல் ஒழிப்போம்: நாமென உழைப்போம்

நல்லறி வுரைத்த உனக்கெம் நன்றி!"

கூடும் குடும்பமும்

குத்துக்கல் மேலே குருவிகள் இரண்டு

குந்தி இருந்தன;

குருவிகள் இரண்டும் கூடு கட்டக்

கூடிப் பேசின:

புளிய மரத்தில் புதிய கூட்டைப்

புனைய விழைந்தது ஆண்:

தென்னை மரத்தில் தேர்ந்து கூட்டைக்

கட்டத் திரிந்தது பெண்:

புளியின் வலிமையைப் புகன்றது ஆண்;

தென்னையின் சிறப்பைத் தெளிவித்தது பெண்;

ஆணும் பெண்ணும் இசைந்தால் அன்றோ குடும்பம்? அசைந்து போனால் குடும்பம் ஆவதும் எப்படி?

ஆணின் உரையை அறவே மறுத்தது பெண்;

.

உண்மை உணர ஒருநாள் வருமென அமைந்தது ஆண்; தென்னை மரத்தில் கூடு கட்டத்