உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 33.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104

இளங்குமரனார் தமிழ்வளம் - 33

தன்னை மறத்தலுக்கும்

தன்னையே மறத்தலுக்கும்தான்

எவ்வளவு வேற்றுமை?

தன்னையே நினைப்பான் உலகையா நினைப்பான்?

நாமன உழைப்போம்

மேசையின்மேலே மெழுகு வர்த்தியை

ஏற்றி வைக்கவும் ஒளிச்சுடர் பொழிந்தது: ஒளிச்சுடர் அறையை உயரிய நிலையில்

ஆட்சி கொண்டது: அப்பொழுது நினைத்தது மெழுகு:

"நானே உருகி நல்லொளி தந்தேன்"

திரியோ நினைத்தது: "நானே கருகிக் கவினொளி தந்தேன்'

தீயும் நினைத்தது: 'நானில்லை என்றால் மெழுகும் திரியும் ஒளியைத் தருமோ?

மூன்றும் முரணாய் நினைத்தன:

முட்டிக் கொண்டு வந்தது காற்று.

மோதித் தாக்கி மூன்றன் பெருமையும்

ஒன்றாய் ஒழியச் சுடரை அணைத்தது;

மூன்றும் ஒன்றாய்க் கேட்டன;

"நாங்கள் மூவரும் செருக்குடன் எண்ணிச்

சிறுதனம் ஆனது உண்மை; ஆனால்,

உன்னைப்போல அரக்கத்தனமாய்

அழித்திடவில்லை; அறிக. “காற்றுச் சொன்னது; தாக்குதல் நேர்ந்ததும் ஒன்றாய் நின்றீர்! தக்க பொழுதில் அதையேன் மறந்தீர்!

ஒருவர் செயலால் உலகம் இல்லை!