உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 33.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வானவில்

மறதி நல்லதா? நினைவு நல்லதா?

மறதியும் நன்றே! நினைவும் நன்றே!

103

மறப்பதை மறந்து நினைப்பதை நினைத்தல் கூடின் மாண்புறு நலமாம்!

'மறத்தல்' என்றும் 'மரத்தல்' ஆகுவதில்லை தானே!

உலகம் உய்ய வழி

சீட்டுப் பறந்தது வெளியே; அன்புப்

பெட்டை இருந்தது வீட்டில்;

தேர்ந்து தேர்ந்து தீனியைப் பொறுக்கித்

தேடி வந்தது சிட்டு:

வீட்டு வாயிலில் விரும்பி அழைக்க

வேண்டியிருந்தது பெட்டை;

முத்தம் கொடுத்து மூக்கைப் பிளந்து

தீனியைத் தந்தது சிட்டு;

நத்திக் கிடந்த நாயகன் அன்பில்

தன்னை மறந்தது பெட்டை;

தன்னை மறந்தால் என்ன விளையும்?

பொதுநலம் பிறக்கும்; புவியும் சிறக்கும்!

தன்னை மறந்த அன்பிலே வந்தது முட்டை!

முட்டையில் வந்தது குஞ்சு!

குஞ்சால் விரிந்தது குடும்பம்!

குடும்பம் விரியக் குலவியது உலகம்

தன்னை மறந்ததால் வந்தது உலகம்!

தன்னையே நினைத்தால் அழிந்தே போகும்!

தன்னை நினைத்தலுக்கும்

தன்னையே நினைத்தலுக்கும்தான்

எவ்வளவு வேற்றுமை?