உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 33.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102

இளங்குமரனார் தமிழ்வளம் - 33

வெள்ளை என்பது பாலையும் குறிக்கும்; கள்ளையும் குறிக்கும்: சலவையையும் குறிக்கும்; பேதைமை, வெண்பா என்பவற்றைக் குறிப்பது நூல் வழக்கு.

தட்டுப்பாட்டுக் காலம்; ஆறு குளம் கிணறு இல்லா டம்! சுடு வெயில்! கால்நடைச் செலவு! இந்நிலையில் ஒருவர் தவிக்குங்கால், கிடைக்கும் தண்ணீரின் மதிப்பு தண்ணீரின் மதிப்பா?

வாய் வறண்டு, கண் பூத்து, கால் தள்ளாடி, மூச்சு முட்டி- கீழே மயங்கி விழுவானுக்கு முகத்தில் தெளித்துப் பருகத் தரும் ஒரு குவளை நீர்க்குக் கோடியும் ஈடாகுமா?

அத்தண்ணீர், தண்ணீரா? உயிரே அல்லவோ!

உயிர்க்கு விலை என்ன? எம்மதிப்பில் அடங்கும் அது?

பெற்றோர் தந்த உயிர்,போகும் நிலையில் போகாமல் காக்கும் நீர், மீண்ட உயிர்க்குத் தாயும் தந்தையும் அல்லவோ? 'தண்ணீர்தானே' என்று சொல்லி விட முடியுமா? தாயும் தந்தையும் அல்லவோ அது.

மறதி

கொலையின் கொடுமையைக் கண் முன் கண்டு கலங்கி

நைகிறான்;

ஆனால், மறதியாம் மருந்து மனத்துளே இருத்தலால் மயங்கி மீளவும் அமைகிறான்!

தீரா நோயை நாளும் கண்டு திணறிப் போகிறான்; ஆனால், மறதியாம் மருந்து மனத்துளே இருத்தலால் மயங்கி மீளவும் அமைகிறான்!

வறுமைத் தீயில் வாடி வெதும்பி வாழ்வை வெறுக்கிறான்;

ஆனால், மறதியாம் மருந்து மனத்துளே இருத்தலால் மயங்கி மீளவும் அமைகிறான்!

சாவினை அறிந்து சஞ்சலம் உற்றுச் சாய்ந்து வீழ்கிறான்;

ஆனால், மறதியாம் மருந்து மனத்துளே இருத்தலால் மயங்கி மீளவும் அமைகிறான்!