உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 33.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வானவில்

தண்ணீர்தானே

101

தவித்த வாய்க்குத் தண்ணீர் தரமாட்டான்... என்பது ஒரு பழமொழி.

தவித்த வாய்க்குத் தண்ணீர் தருதல் என்பது அறமாகக் கொள்ளப்பட்டது. அதற்காகத் தண்ணீர்ப் பந்தல் நீர்ச்சாலை என அறவோர் உண்டாக்கினர். குளம் தோண்டியும் கிணறு வெட்டியும் நீர்ச்சாலை அமைத்த செய்திகள் கல்வெட்டில் உண்டு.

அப்பூதியடிகளார்,

தண்ணீர்ப்பந்தல்

நாவுக்காசர் பெயரால் வைத்தமை, திருத் தொண்டர் புராணச் செய்தி. இந்நாளிலும் அத்தொண்டு ஆங்காங்கு நிகழல் கண்கூடு.

வான் மழையை அமிழ்து என்றது திருக்குறள். சோறும் அமிழ்தே! நீரும் அமிழ்தே!

உயிர் வாழ்வுக்கு இன்றியமையாதவை யெல்லாம் அமிழ்தே! பாலமிழ்து, மருந்தமிழ்தம், அமிர்தப் பால் என்பன அறிக.

தண்ணீர் எளிய பொருளா?

வள்ளுவ வான்சிறப்பைக் கற்றார் 'தண்ணீர்தானே' என எளிதாகக் கொள்ளார்.

தாயைப் பிழைத்தாலும் தண்ணீரைப் பிழையாதே என்னும் பழமொழி எக்காலத்தினும் இக்காலத்திற்கு இன்றியமையாத தாயிற்று.

'சுடு தண்ணீர்' என்பது வெந்நீர்.

சில இடங்களில் சுடுதண்ணீர் என்பது காபி, நேநீரைக் குறிக்கும்.

'சுடுதண்ணீர் குடித்து விட்டுப் போகலாம்' என்பது விருந்தோம்பல்.

'தண்ணி போட்டு விட்டு வருகிறான்' என்னும் நடை குடியன் என்பதைக் குறிக்கும்.

தண்ணீர் என்பது கள்ளைக் குறிக்கும்; சாராயத்தையும் சுட்டும். குடி என்பதே மதுக்குடி ஆயிற்றே.