உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 33.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100

இளங்குமரனார் தமிழ்வளம் - 33

என்னால் மட்டும் என் வாழ்வு இயல்வது இல்லை. என்னுள் மட்டும் என் வாழ்வும் ஒடுங்கி விடுவது இல்லை.

எனக்கு உதவுவார் பலர் இருப்பது போலவே, அப்பலர்க்கு உதவுபவனாக நான் கடனாற்றல் என் செய்ந்நன்றிக் கடப்பாடு.

அதனைச் செய்யத் தவறுதல் என் பிறப்பை அறிவறிந்த பிறப்பு ஆக்காது.

ஆதலால், அச்செயலுக்கு என்னை ஒப்படைக்கும் அளவுக்குத் தகவே என் பிறவிப்பேறும் அமைகின்றது.

உலகுக்கு என்னை ஒப்படைத்தலில் இருவகையுண்டு.

அவை எனக்கு நேரிடையாக உதவும் உதவியாளர்க்கு நான் செய்ய வேண்டும் கடமை; ஊண் உடை போன்றவை உதவுவார் அவர்.

-

எனக்கென்று நேரிடையாக அன்றி - இவர்க்கு அவர்க்கு என்னல் அன்றி உலகு தழுவிய அளவில் பயன்படும் கொடையாளர்க்கு நான் செய்ய வேண்டும் கடமை; பொது நலக் கொடையரும், பொதுநலக் கண்டுபிடிப்பாளரும் அவர்.

இவற்றுள் முன்னது, செய்ந்நன்றி அறிதல்.

பின்னது நன்றியறிதல்.

முன்னது, அடித்தளம்.

பின்னது, எழுநிலை மாடம்.

முன்னைத் தளமே வலுவாக அமையாக்கால் பின்னை மாடம் எழும்பாது; சீர்சிறவாது:

ஆதலாலேயே, வள்ளுவம் முன்னிலையைத் தன்னிலை

யாகக் கொள்ள வேண்டுவதன்

தெரிவித்தது. அது,

ன்றியமையாமையைத்

"எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை

செய்ந்நன்றி கொன்ற மகற்கு'

59

என்பது. இதில் 'நன்றி' என்றும் 'செய்ந்நன்றி' என்றும்

பகுத்துக் கூறும் பாங்கு அறிக; போற்றுக.