உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 33.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வானவில்

99

"நான் பெருமை பெற வேண்டும்" என்னும் நினைப்பால் வருவதா அது? இல்லை.

"என் தீராக் கடமை" என்னும் திருநெறியால் வருவது அது. என்னை, என் முயற்சியா பிறக்கச் செய்தது?

என்னை, என் பொருள்களா வளரச் செய்தன?

என்னின் நலங்களுக் கெல்லாம், என்னறிவே அடிப்படையா? என்னின் வாழ்வுச் சீர்களுக்கெல்லாம், என் உழைப்பே

மூலமா?

வ்வினாக்களுக்கெல்லாம்

இல்லை', இல்லை'

என்பதை அன்றி, 'ஆம்' என்று கூற ஒன்றேனும் உண்டா?

என் பெற்றோரை எண்ணும் யான், அவர் தொல்பழந தாதா'வைத் 'தாத்தி'யை விட்டு விடமுடியுமா?

அவர்கள் முதல் என் வரை, அவரவர் முயற்சியாலேயே வந்தனவா, ஊணும் உடையும் உறைவிடமும் பயன் பொருளும் பிறவும்? ஒவ்வொருவர் ஊணிலும் உடையிலும் உறைவிடத்திலும் பயன் பொருளிலும் பிறவற்றிலும் எத்தனை எத்தனை பேர்களின் உழைப்புத் தேங்கிக் கிடக்கிறது!

ஒரு

துண்டுத்துணி! அத்துணியுள் உழைப்பாளர் எத்தனை பேர்?

ஒளிந்துள்ள

உழுதவர், விதைத்தவர், நீர் இறைத்தவர், களை எடுத்தவர், சுளை எடுத்தவர், பஞ்சு பிரித்தவர், நூற்றவர், நெய்தவர், சலவை செய்தவர், சுமந்தவர், விற்றவர் இப்படி எத்தனை பேர்களை அந்நூலிழைகள் தாங்கிக் கொண்டுள்ளன. அவர்களுக்கு நான் செய்யும் கைம்மாறு என்ன? விலைக் காசு அளவில் நின்று விட்டால் என் கடன் தீர்ந்ததாகுமா? எனக்கு உதவிய பெருமக்களுக்கு யான் எவ்வகையால் எல்லாம் மாற்றுக் கடமை புரிதல் வேண்டும்!

ஒரு வேளை

ணவிலே, ஒரு வேளை மருந்திலே எத்தனை பேர்களுடைய மூளையும் உடலும் உழைப்பும் எண்ணமும் தொடர்பு கொண்டுள. அவற்றைத் துய்க்கும் நான் அவர்களுக்கு - உலகுக்கு - ச் செய்யும் மாற்றுதவி

என்ன?

"