உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 33.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98

இளங்குமரனார் தமிழ்வளம் - 33 இல்வாழ்வுத் திருவழிக்கு உரியது, பொதுவாழ்வுப் பெரு வழிக்கும் உரியதே.

என் கையில் உள்ள கம்பைச் சுழற்ற எனக்கு உரிமை உண்டு.

ஆனால், அக்கம்பு எவர் மூக்கின் நுனையை நெருங்கவும் எனக்கு உரிமை இல்லை!

உரிமை என்பது உள்ளப் பொருள்! உயிர்ப்பொருள்! உயிர்ப்பொருளாம் உரிமையைப் பொதுப் பொருளாகப் போற்றல் உயிருடையார் அனைவரின் பொதுக்கடமையாம்.

நன்றியும் செய்ந்நன்றியும்

உலகம் ஒரு கடல்

நான் அக்கடலில் ஒரு துளி.

உலகம் ஒரு பெருமலை.

நான் அம்மலையின் ஒரு சிறு கல்.

உலகம் ஒரு பெருந் தோப்பு.

நான் அத்தோப்பின் ஓர் எளிய கனி.

நான் இல்லாமலும் ல்லாமலும் கடல் இருந்தது இருக்கவும் செய்யும்.

நான் இல்லாமலும் தோப்பு இருந்தது; இருக்கவும் செய்யும்.

நான் இல்லாமலும் மலையும் இருந்தது; இருக்கவும் செய்யும்.

ஆனால், அக்கடலும், அம்மலையும், அத்தோப்பும் ல்லாமல் நான் இல்லை; இருக்கவும் இயலாது.

ஆதலால், உலகுக்காக நானே அன்றி, எனக்காக உலகு இல்லை. உலகுக்காக நான் என்னும் போது என்பிறப்பு பேறடைகின்றது.

எனக்காக உலகு என்னும் போது என் பிறப்பு, கேடடைகின்றது.

உலகுக்காக என் பிறப்பு" என ஏன் நான் எண்ண

வேண்டும்?