உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 33.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வானவில்

109

அப்படியே அஞ்சலை வாங்கி அவர் பார்க்கும் இடத்தில் அதை வைத்துப் போக, வேறொருவர் அதனை மறைக்குமாறு வேறொரு பொருளை வைத்துவிட அவ்வஞ்சல் பாராமல் கிடந்துவிட வாய்ப்பு இல்லையா?

நாம் அஞ்சல் விடுக்க அவ்வஞ்சல் எய்து முன் அவர் வெளியூர் சென்று பல நாள்கள் தங்க நேர்ந்திருந்தால், அதற்கு அவர் என்ன செய்வது?

இன்னும் எதிர்பாரா விளைவுக்கோ, முளா முடிவுக்கோ ஆட்பட்டு விடுவதும் கூடாததா?

பன்னாட்கள் மறுமொழி இல்லையே இல்லையே என்று திட்டிக் கொண்டிருந்தவர், தற்செயலாகத் தாம் படிக்கும் நூலை எடுத்துப் பார்க்க அதில் அவ்வஞ்சல் அட்டை அனுப்பப்படாமலே இருக்கக் கண்டு 'என்ன மடத்தனம் செய்து விட்டோம்' என்று தமக்குத் தாமே கழிவிரக்கம் கொள்வதும் காணக் கூடாததா?

'இந்த அஞ்சலை அனுப்பு' என்று குழந்தையிடம் தர, பள்ளிக்குச் செல்லும் அக்குழந்தை அதைத் தன் சுவடிக்குள் வைத்துவிட்டு மறந்துபோய்ப் பின்னே ஒருநாள் கண்டு 'ஐயோ! மறந்துவிட்டேன்; இதனை அஞ்சலில் போட்டால் அது பிந்திவந்தது என்று எழுதுவார்; அப்பா, ஏன் உடனே அஞ்சல் பெட்டியில் போடவில்லை என்று திட்டுவார்; அவற்றைத் தவிர்த்துவிடக் கிழித்து எறிவதே நல்லது என்று ஓர் எதிர் முடிபுக்குக் குழந்தை போய்விடுவது நடக்கக் கூடாததா?

கடிதமெல்லாம் எழுதி அஞ்சல் முகவரி எழுதாமல், குறியீட்டு எண் பயன்படுத்தாமல் எத்தனையோ அப்பெயருடைய ஊர்களுக்குச் சுற்றிப் பின்னர் எப்படியோ போய்ச் சேருவது இல்லையா?

நாம் நன்றாக எழுதி நாமே பெட்டியில் போட்டு விட்டோம் என்னும் அஞ்சலில் முகவரியை நினைவுகொண்டு எழுத ஊரும்பேரும் மாறி உரிய இடம் காண்டற்கு இயலாமல் 'முடிவு அஞ்சல்' நிலையத்திற்குச் சென்று (Dead letter office) ஆங்கிருந்து நம் முகவரிக்குக் கறுப்பு வண்ணம் தீட்டி அவ்வஞ்சல் வர, அதன் உறையில் ஒரு பெயரும் அப்பெயர்க்குத் தொடர்பிலா மற்றொருமுகவரியும் இருக்க என்ன நினைவில் எழுதினோம் என நம் தலையை நாமே பிய்த்துக கொண்டிருக்க நேரிடுவதும் இல்லையா?