உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 33.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110

இளங்குமரனார் தமிழ்வளம் - 33

ஒருமுடிபு கொள்வதற்கு எத்தனை பாடுகள்? தடைகள்? ஆனால் என்ன? ஒவ்வொன்றற்கும் இச்சிக்கல்கள் உண்டாவது இல்லை என்பதே ஓர் ஆறுதல்; ஒரு நம்பிக்கை! இதன் தெளிவு என்ன? ஒரு முடிவுக்கு வருமுன் தெளிவாக எண்ணித் தேர்தல் வேண்டும் என்பதே. விரைந்த முடிவு, வீண்முடிவு என்பது பல்கால் தெளிவாதலுண்டு.

புண்படுத்தலா? பண்படுத்தலா?

வழியிலே போகும் போது, ஒரு கல் கிடக்கிறது. அக்கல்லைப் பாராமல் நடக்கிறேன்.

கால் கல்லில் மோதுகிறது.

கல்லா மோதிற்று? இல்லை!

காலே மோதிற்று. எனினும் என் சொல்கின்றேன்? "கல் தடுக்கிவிட்டது; கல் இடித்து விட்டது" என்று சொல்கிறேன்.

கல்லா தடுக்கியது? கல்லா இடித்தது?

நான் இடித்துக் கொண்டேன் என்றால் அது என் குறை கண்டது ஆகும்.

திருந்துவதற்கு வழியும் ஆகும்.

என்குறை காணாமல் கல்லின்மேல் இடித்த குறையைப் போடுகிறேன்.

புண்படுத்தியது என்று புலம்புகிறேன்.

நான் திருந்துவதற்கு வழியுண்டா?

'குடு குடு'குழந்தை முதல் 'கிடு கிடு' கிழவர் வரை ப்போக்கில் மாற்றமில்லை. கல் புண்படுத்தியது என்றால், 'அதற்குப் புண்படுத்தவேண்டும்" என்னும் எண்ணம் உண்டா?

உயிரிலா அது உணர்விலா அது, என்னைப் புண்படுத்த எப்படி நினைக்கும்.

புண்படுத்த வேண்டும் என்றால் என்மேல் வெறுப்பு,பகை, சீற்றம், மாறுபாடு இருத்தல் வேண்டுமே!

கல்லுக்கு எப்படி இவையுண்டு?