உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 33.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வானவில்

111

செய்யாக் குற்றத்தைச் செய்ய அறியாததன்மேல், குற்றத்தைச் செய்து கொண்ட நானே சுமத்துகிறேன்!

கல்லுக்கு வாயில்லை! நாவில்லை! என் பழியைப் பற்றிய கவலை இல்லாமல் கிடக்கிறது.

அக்கல் புண்படுத்தியது என்பதற்கு மாறாக, என்னைப் பண்படுத்தியது என்று நான் எண்ணினால் எனக்கு எத்தனை நன்மை?

கல் ஒரு பண்படுத்தமா செய்கின்றது?

"பார்த்துப்போ' என்பது முதல் பண்படுத்தம்.

"ஒதுங்கிப் போ" என்பது இரண்டாம் பண்படுத்தம். 'உன்னைப்போல் இன்னொருவனும் தட்டிப் புண் படாமல் எடுத்துப் போட்டுவிட்டுப்போ" என்பது மூன்றாம் பண்படுத்தம்.

"கற்றுவிட்டோம் எல்லாம் என்று எண்ணுகிறாயா? 'கற்றது கைம்மண் அளவு கல்லாதது உலகளவு'. ஆதலால் கல்! கல்! என்றும் கற்றுக் கொண்டே ரு" என்பது நான்காம்

பண்படுத்தம்.

66

"கல்லுதல் என்பது தோண்டுதல்; உன்னிடத்துள்ள 'யான்' 'எனது' என்னும் செருக்குக்கு அகந்தைக்கு அளவு உண்டா? அச்செருக்கைக் கல்லி (தோண்டி) எறி" என்பது ஐந்தாம் )எ பண்படுத்தம்.

கல் என என்னை மிதித்தாயே! உன் காலில் மிதிபட்டயான் கலைவல்லான் ஒருவனின் கைச்சிற்றுளியும் சுத்தியலும் பட்ட அளவில் எவ்வளவு மதிப்புக்குரிய கலைச் செல்வமாக மாறிவிடு வேன் என்பது அறிவாயா? மதிப்பாளன் அல்லன் நீ அதனால், மதிப்பாளனாகத் தோன்றவில்லை நான்; மதிப்பாளனாக நீ இருந்தால் நானும் மதிப்புக்குரியவனாக இருந்திருப்பேன்! "நின் குறையா? என் குறையா?" என்று எண்ணிப்பார் என்று எடுத்துரைத்து ஏவுவது ஆறாம் பண்படுத்தம்.

இன்னும் கேள் கண்ணுக்கு விருந்தாம்

கலையாக

மட்டுமில்லாமல் கையெடுத்து வணங்கத்தக்க கடவுட்சிலை யாகவும் நான் ஆகிவிட முடியும். அப்பொழுது பார், கோடி கோடிப்பேர் தேடித் தேடி வந்து வணங்கி நிற்பதை என்று