உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 33.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112

ஓ இளங்குமரனார் தமிழ்வளம் - 33

இடித்துரைத்து மிதிப்புறு வாழ்வை மதிப்புறு வாழ்வாக்கத் தூண்டுவது ஏழாம் பண்படுத்தம்.

இப்படி எண்ணின் அக்கல், கற்பவர் விழுங்கும் கற்பகக் கனியாக அல்லவோ விளங்குகிறது!

கல்லின் இடிப்பு, புண்படுத்தலா பண்படுத்தலா? எண்ணும் எண்ணத்தில் இருக்கிறது இறக்கமும்! கல்லில் இல்லையே!

வானவில்

செங்கதிராம் கலைவல்லான்

செய்தமையாத் தூரிகையால்

கங்குகரை யற்றவொளிக்

கலவைகளைக் களித்தள்ளி

வானத்துப் பெருந்திரையில்

வரைகின்றான்; முகிலென்னும்

கானத்து மாளிகைக்குக்

கவின்வளைவு செய்கின்றான்;

கண்ணிமைக்கும் பொழுதுக்குள்

கலகலத்து மறுநொடியில்

மண்ணிடையில் விழுந்தேங்கி

மறுகுசிறு மகவென்னத்

தான்தந்த ஒளிமகவைத்

தேன்தந்த சுவைப்பொருளை

வான்தந்த மலர்த்தொடையை

வதைப்பெய்தச் செய்கின்றான்;

ஞாலத்துப் பூப்பறித்து

நயத்தகு மாலையெனக்

காலத்தால் செய்தமைத்த

காரென்னும் பேரன்னை

தன்மகவின் வண்ணத்தில்

தனியின்பம் தழைத்திருக்க,

அன்னதனைக் கொல்வதுவோ

அப்பனது செயலாண்மை?

ஏற்றமும்