உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 33.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எழுவண்ணப் பூமாலை;

வானவில்

எழுதொண்ணா நிறமாலை;

'புழுதியிலே நடவாதீர்

பூமலர்க்கும் நடுக்கமுறும்

கால்கடுக்கும்' எனக்கருதிக்

கன்னியன மடவார்கள்,

மேல்நடக்கச் செய்தமைத்த

மேற்பாலம்; பூப்பாலம்!

வெயிலோடு மழைபெய்யும்

வேளையிலே வெளித்தோன்றி

ஒயிலாக வளைந்தாடும்

மயிலம்மை! மணிய மை!

காலையிலும் மாலையிலும்

தலைகாட்டிக் கடும்பகலும்

மாலிரவும் தலைகாட்ட

மாட்டாத முக்காட்டாள்!

கதிரென்னும் நட்டுவனார்

கைகாட்டிக் கண்காட்டிச்

‘சதிராட்டம் போடு’கெனச்

சாய்ந்தாடும் பெருவிறலி!

கார்முகில்தன் கதிரோனைக்

கண்பொத்தி விளையாடப்

பேரதிர்ச்சிப் பிழம்பாகிப்

பெருங்காதல் தோல்வியினால்

கண்கலங்கிக் கசிந்தழுது

கண்முன்னே நில்லாமல்

வண்ணமுகம் காட்டாமல்

மின்னற்கும் பேரிடிக்கும்

மன்னிவளர் மழையோடு

மோனத்தைப் பொருளாக்கி

முழந்நாளில் நடந்தேறி

வதைகின்ற பெண்பாவை!

பின்பிறந்த இளந்தங்கை!

விளையாடும் உடன்தோழி!

113