உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 33.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வானவில்

முகிலென்னும் சேற்றுக்குள்

முளைத்தெழுந்த பூக்காடு! அகச்சினத்தால் உடைத்தெறிந்த அணிவளையில் அரைபாதி!

பூமகளார் கொண்டைக்குப்

பூட்டிவிடு சரமாலை!

மாமரத்துக் கிள்ளைக்கு

மாட்டிவிடு மணியாரம்!

காஞ்சியெனும் அணியாகிக்

காஞ்சியெனும் திணைவிளக்க

வாஞ்சையொடும் வருகின்ற

வண்ணத்துப் பெரும்பூச்சி!

அன்னதனின் வனப்புரைக்க

அமையுமொரு திறனில்லை.

பின்னமது சொல்லேன் பிற.

115

(மதுரை, டோக் பெருமாட்டி கல்லூரி. முத்தமிழ் விழாப் பாட்டரங்கில் பாடிய 'வானவில்'லின் ஒரு பகுதி; நாள்: 19-2-1970)