உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 33.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120

இளங்குமரனார் தமிழ்வளம் - 33

வெருட்டுங்கள்" என்றார். அரசர் ஏவல்படியே ஏவலர்கள் முல்லாவை அடித்து வெருட்டினர்.

வேட்டைக்குச் சென்ற அரசருக்கு என்றும் இல்லாத வெற்றி அன்று கிடைத்தது. அவர் வைத்த குறியெல்லாம் தவறாமல் பட்டன! வேட்டை குவிந்தது. அந்த வெற்றியிலே பெருமிதம் அடைந்த அரசர், வேட்டைக்குப் புறப்படுமுன் முல்லைவை வெருட்டியடித்ததை நினைத்து வருந்தினார்.

அரண்மனைக்கு வந்த அரசர், முல்லாவை வரவழைத்தார். "முல்லாவைக் கண்டால் எதுவும் விளங்காது எனக் கேள்விப் பட்டிருந்தேன். ஆனால் உம் முகத்தில் விழித்து வேட்டைக்குப் போன நான் பெரும் வெற்றியோடு திரும்பியுள்ளேன்" என்றார். அரசர் மகிழ்ச்சியுடன் சொல்லியதைக் கேட்ட முல்லா, "அரசே, என்னைத் தாங்கள் கண்டு, வேட்டைக்குச் சென்றதால் பெருவெற்றி பெற்றீர்கள். ஆனால், நான் இன்று உங்களைக் கண்டதால் சாட்டையடி பெற்றேன். நம் முகங்களில் எவர் முகம் விளங்காத முகம் என்பதை நீங்களே கூறுங்கள்" என்றார்.

வெற்றிக் களிப்புடன் இருந்த வேந்தர் முல்லாவின் உரையைக் கேட்டு வெட்கப்பட்டார்.

முதன்முதலாகய் எவர் முகத்தில் விழிக்கிறோமோ அதற்குத் தக்கபடியே அன்றைய நடப்புகள் இருக்கும் என்னும் நம்பிக்கை, இங்கு மட்டுமில்லை, எங்கும்தான் இருக்கிறது! அவரவர் நடவடிக்கைக்கு, அடுத்தவர் முகம் என்ன செய்யும்.

2. வசதிக்குத் தக்கது வாய்மை

ஒரு திருடி; அடுத்த வீட்டுக் கோழியைத் திருடிவிட்டாள். அடுத்த வீட்டுக்காரிக்கு 'இவள்தான் திருடினாள்' என்று தெளிவாகத் தெரிந்தது. அதனால், "நீ தான் எங்கள் கோழியைத் திருடினாய்" என்று குற்றம் சாட்டினாள்.

திருடியவள், குற்றச்சாட்டை ஏற்றுக் கொள்வாளா? "கடவுள் உண்மையாக நான் திருடவே இல்லை" என்று மறுத்தாள்."அப்படியானால், கோயிலில் வந்து கடவுள் முன்னிலையில் உண்மை கூறு” என்று ஆணையிட்டாள் கோழி திருடு தந்தவள். திருடியவள் "அதற்கென்ன; திருடியிருந்தால் தானே நான் அஞ்சுவேன்; நான்தான் திருடவே இல்லையே; ஆயிரம் கோயிலில் உண்மை கூறுகிறேன்" என்றாள்.