உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 33.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முல்லாவின் கதைகள் முப்பது

121

"உன் பிள்ளைகள் தலையில் அடித்து உண்மையாகத் திருடவில்லை" என்று கூறு என்றாள். கோழியைப் பறிகொடுத் தவள். கோழி திருடியவள், பெற்ற வயிற்றைக் காட்டி "நான் திருடியிருந்தால் இந்த இரண்டையும் தின்று தண்ணீர் குடிக்கிறேன்" என்று கோயிலில் உண்மை கூறினாள்.

அவள் கூறிய உண்மையைக் கேட்டவர்கள் அவளுக்கு இரண்டு மக்கள் இருந்தால் அவர்களைச் சாகக் கொடுத்துத் தண்ணீர் இறைக்கிறேன் என்று சொன்னதாக நம்பினார்கள். எனவே அவள் கோழியைத் திருடவில்லை என்று முடிவு செய்தார்கள்.

கோழியைத் திருடியவளோ, தன் மடியில் எவருக்கும் தெரியாமல் இரண்டு தோசைகளைக் கட்டி வைத்திருந்தாள். அதை எடுத்து ஒரு குளக்கரையில் வைத்துத் தின்று தண்ணீர் குடித்து விட்டுப் போய்விட்டாள். நான் கோழியைத் திருடி யிருந்தால் “இரண்டையும் தின்று தண்ணீர் குடிக்கிறேன்" என்று வயிற்றில் அடித்துத்தானே உண்மை சொன்னாள். அவள் சொன்ன உண்மையை நிறைவேற்றி விட்டாள் அல்லவா!

இப்படி உண்மையை மறைத்து நம்பச் செய்பவர்கள் ஒவ்வொரு நாட்டிலும் உண்டு என்பதை முல்லா கதை யொன்றால் அறியலாம்:

முல்லா ஓர் ஊருக்குச் சென்றார். அவர் சென்ற வழியில் ஒரு மோதிரம் கிடந்தது. வழியில் கிடந்த மோதிரத்தைப் பார்த்த முல்லா எடுக்காமல் விடுவாரா?

முல்லாவின் நாட்டுச் சட்டம் 'கண்டெடுத்த பொருளைத் தாமே வைத்துக்கொள்வது குற்றம்' என்று இருந்தது. கண்டெடுத்த பொருளை ஊர்ச் சந்தையில் மூன்று முறை சொல்லி, அதனை எவரும் உரிமை கொண்டாடவில்லை என்றால்தான் எடுத்தவர் வைத்துக்கொள்ளலாம்!

எனத்

முல்லா, சட்டப்படி நடக்க வேண்டும் திட்டப்படுத்திக் கொண்டார். ஆனால் விலையுயர்ந்த மோதிரத்தை இழக்கவும் அவர் விரும்பவில்லை. ஆதலால், அதனை எண்ணிக்கொண்டே சந்தைக்குச் சென்றார்.

எவரும் எழுந்திருக்குமுன் விடியற்காலையிலேயே முல்லா எழுந்தார். சந்தைக்கு ஓடினார். "நான் ஒரு மோதிரத்தைக் கண்டெடுத்தேன்” என்று இரண்டு முறை சொன்னான். மூன்றாம் முறை சொல்லும்போது சிலர் சந்தைக்கு வந்தனர்.