உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 33.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122

இளங்குமரனார் தமிழ்வளம் - 33

ஆனால், முல்லா சொன்னது அவர்களுக்குத் தெளிவாகக் கேட்கவில்லை. "முல்லா! நீர் ஏதோ சொன்னீரே! என்ன சொன்னீர்?" என்று அவர்கள் வினாவினர்.

"சட்டப்படி மூன்று முறைதான் சொல்லவேண்டும்; நான்காம் முறை சொல்வது சட்டப்படி குற்றம்; இந்த மோதிரம் என்னுடையது என்று சொல்லிக்கொண்டே அதைத் தம் விரலில் போட்டுக்கொண்டார்.

விளக்கிச் சொல்வானேன்; கண்டெடுத்த மோதிரத்தை இழப்பானேன்?

3. இழந்தது எவ்வளவு?

ஒரு படகோட்டி படகைச் செலுத்திக் கொண்டிருந்தான். படகில் இருந்த பெரியவர் ஒருவர், "படகோட்டி, மெய்ப்பொருள் பற்றி உனக்குத் தெரியுமா?" என்றார்

66

"எனக்குத் தெரியாது" என்றான் படகோட்டி. 'அப்படியானால், உன் வாழ்வில் கால்பாகத்தை இழந்து விட்டாய்" என்றார் பெரியவர்.

பின்னர், “உனக்கு வானியல் தெரியுமா?" என்று பெரியவர் படகோட்டியிடம் கேட்டார்.

"தெரியாது" என்றான் படகோட்டி.

"உன்வாழ்வில் பாதியைப் பாழாக்கி விட்டாய்" என்று வருத்தத்துடன் சொன்னார் பெரியவர்.

மீண்டும் பெரியவர் படகோட்டியை நோக்கி, “உனக்கு இலக்கணம் தெரியுமா?" என்று வினவினார்.

'இலக்கணமா? எனக்கு எழுதப்படிக்கவே தெரியாது" என்றான் படகோட்டி!

"ஐயோ! நீ உன் வாழ்வில் முக்கால்பாகத்தைக் கெடுத்து விட்டாயே! நீ இனி என்ன செய்யப் போகிறாய்! பாவம்! என்றார் பெரியவர். படகோட்டி நிலைமைக்காகப் பெரியவர் பெரிதும் வருந்தினார்.

படகு சிறிது தொலைவு சென்றது. சுழல் காற்று, படகை அசைத்து ஆட்டியது; குப்புறத்தள்ளி ஆழ்த்தி விடுவதுபோல் அடித்தது. 'இனிப்படகை மூழ்காமல் காக்க முடியாது' என்னும் நிலைமையைத் தெரிந்ததும் படகோட்டி, பெரியவரைப் பார்த்துக் கேட்டான். "எல்லாம் அறிந்த பெரியவரே, உங்களுக்கு நீந்தத் தெரியுமா?" என்றான்.