உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 33.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(6

முல்லாவின் கதைகள் முப்பது

123

"நீந்தவா? எனக்குத் தெரியாதே!" என்றார் பெரியவர். 'அப்படியானால் நீங்கள் உங்கள் வாழ்வை முழுமையாகவே பாழடித்து விட்டீர்கள்" என்று கவிழப் போகும் படகில் இருந்து நீரில் குதித்துக் கொண்டே படகோட்டி கூறினான்.

இவ்வாறு இங்கு ஒரு கதை வழங்குகின்றது. இப்படியே முல்லா கதை ஒன்று விளங்குகின்றது:

முல்லா ஓர் ஆற்றில் படகோட்டிக்கொண்டு சென்றார். அவர் படகுக்கு, மொழிப் பேராசிரியர் ஒருவர் வந்தார். அவர் படகில் ஏறியதும் முல்லாவினிடம் உரையாடினார்."முல்லா, உங்களுக்கு மொழியிலக்கணம் தெரியுமா?" என்றார்.

"மொழியிலக்கணம் நான் படித்ததில்லையே" என்றார்

முல்லா.

"அப்படியானால் உம் வாழ்வில் பாதியைப் பாழாக்கி விட்டீர்" என்றார் போராசிரியர்.

சிறிது தொலைவு படகு சென்றது. படகில் பொத்தல் ஒன்று விழுந்துவிட்டது. அப் பொத்தலில் தண்ணீர் விரைவாக ஏறியது. படகைக் கவிழ்த்துவிடும் அளவுக்கு நீர் பெருக்கெடுத்தது. முல்லா பேராசிரியரைப் பார்த்து, "உங்களுக்கு நீந்தத் தெரியுமா," என வினவினார். எனக்கு நீந்தத் தெரியாதே" என்றார் பேராசிரியர்."அவ்வாறானால் உங்கள் வாழ்க்கையை முழுமை யாகப் பாழாக்கிவிட்டீர்கள்! படகு கவிழப் போகிறது" என்றார் முல்லா!

எந்தெந்த நாடானாலும் மக்கள் உள்ளத்தில் ஒரு பொதுத்தன்மை அமைந்தே கிடக்கிறது என்பது இக்கதைகளால் புலப்படும்.

4. ஒரே முறையில் செய்துவிடு

ஓர் அரசர் தம் அமைச்சருக்கு நிரம்பச் சம்பளம் காடுத்தார். அமைச்சர் அந்தச் சம்பளத்தால் மிக வாய்ப்பாக வாழ்ந்தார். அவர் குடியிருப்பதற்கு நல்ல மாளிகை, அழகான தோட்டம் ஆகியவற்றை அமைத்துக் கொண்டார். வீட்டி உள்ளவர்களின் உணவு, உடை ஆகியவை மிகச்சிறப்பாக இருந்தன. இவற்றைக் கண்டு காவலன் ஒருவன் மிகப் பொறாமைப்பட்டான்.

"நான் அரண்மனையில் எவ்வளவோ காலமாக வேலை பார்க்கிறேன். நாளெல்லாம் ஓயாமல் ஒழியாமல் ஓடியாடி