உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 33.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124

இளங்குமரனார் தமிழ்வளம் - 33

வேலை செய்கிறேன். இந்த அமைச்சர் ஏதோ சிறிது பொழுது அரண்மனைக்கு வருகிறார்; அரசரோடு பேசுகிறார்; விருப்பம் போல் போய்விடுகிறார்; தம் வீட்டிலேயே இருந்து கொள்கிறார். அரசர் இவருக்குக் கைந்நிறையச் சம்பளம் தருகிறார்; எனக்குக் கட்டுபடியாகாத தொகை தருகிறார்," என்று நினைத்தான். தன் நினைப்பை அடக்கிக் கொள்ள முடியாமல் தன்னோடு வேலை செய்பவனிடம் சொன்னான். அவன் இன்னொருவனுக்குச் சொன்னான். இப்படியே இச்செய்தி அரசருக்கு எட்டிவிட்டது.

அரசன் காவலனை அழைத்தார். "இதோ, ஒரு வண்டி போகிறதே; என்ன என்று கேட்டுவா" என்றார்.

காவலன் தெருவில் போன வண்டியை நெருங்கி 'என்ன வண்டி' என்றான்.

'அரிசி வண்டி' என்றான் வண்டிக்காரன். 'அப்படியா' என ஓடிவந்தான் காவற்காரன். அரசரிடம் சொன்னான்.

அரசர், 'வண்டி எங்கேயிருந்து போகிறது' என்றார். 'நான் கேட்கவில்லை; கேட்டுவிட்டு வருகிறேன்' என்று மீண்டும் ஓடினான்.வண்டி சிறிது தொலை போய்விட்டது.

வண்டிக்காரனிடம், 'வண்டி எங்கே போகிறது?' என்றான். போகும் இடத்தைச் சொன்னான் வண்டிக்காரன். அதனை மீண்டும் வந்து அரசரிடம் சொன்னான். இப்படியே 'எங்கேயிருந்து வருகிறது?' 'அரிசி விலை என்ன? என்பன போன்ற வினாக்களுக்கெல்லாம் மீண்டும் மீண்டும் போய்ப் போய்க் கேட்டுவந்து சொன்னார் காவற்காரன்.

9

அவன் முன்னிலையில், அமைச்சரிடம், 'அது என்ன வண்டி?' என்று கேட்டுவரச் சொன்னார் அரசர். அவர் போய் வண்டியைப்பற்றிய முழு விளக்கத்தையும் தெரிந்துகொண்டு வந்து கூறினார். அப்பொழுது காவற்காரன், அமைச்சருக்கு அந்தச் சம்பளம் தகும் என்பதை ஏற்றுக்கொண்டு பொறாமையை விட்டான். இப்படியொரு கதை நாட்டுப் புறங்களில் வழங்குகின்றது. முல்லா கதையொன்றும் இதனை யொட்டிச் சொல்லப்பெறுகின்றது. இக்கதை செல்வனது முட்டாள் தனத்தை விளக்குகின்றது:

முல்லா செல்வன் ஒருவனிடம் பணிசெய்தார். ஒரு நாள் செல்வன் முல்லாவைப் பார்த்து, "நீர் ஏன் இன்று அடிக்கடி கடைவீதிக்குப் போனீர்" என்றான்.