உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 33.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முல்லாவின் கதைகள் முப்பது

125

ஒரு முறை கோதுமை வாங்குவதற்காகவும், மற்றொரு முறை முட்டை வாங்குவதற்காகவும், பிறதொரு முறை எண்ணெய் வாங்குவதற்காகவும் போனதாக முல்லா கூறினார்.

செல்வன், "என்ன இது? முட்டாள் தனமாக இருக்கிறதே! வாங்க வேண்டியவற்றை யெல்லாம் ஒரே மொத்தமாக வாங்கிக்கொண்டு வரவேண்டாமோ?" என்றான். "சரி; இனிமேல் அப்படியே செய்கிறேன்" என்றார் முல்லா.

ஒரு நாள் செல்வனுக்கு உடல்நலமில்லாது போய்விட்டது. மருத்துவரை அழைத்துக்கொண்டு செல்வன் முல்லாவினிடம் சொன்னான்.

வருமாறு

மருத்துவரை அழைக்கப் போன முல்லா, அவருடன் மற்றிருவரையும் அழைத்துக்கொண்டு வந்தார்.

செல்வன், 'மருத்துவரைத்தானே அழைத்து வரச் சொன்னேன்? இவர்கள் இருவரும் யார்?" என்றார்.

"செல்வரே, உ உமக்கு மருத்துவம் பார்ப்பதற்காக மருத்துவரை அழைத்து வந்தேன்; ஒருவேளை மருத்துவரால் உம் உடல் நலம் பெறவில்லையானால் இறுதி முறி (உயில்) எழுத வேண்டுமே என்பதற்காக வழக்கறிஞரை அழைத்து வந்தேன்; அதற்குப்பின் நீர் பிழைக்காமல் இறந்து போனால், அடக்கம் செய்ய வேண்டுமே என்பதற்காக இவரை அழைத்து வந்தேன். ஒவ்வொரு வேலைக்கும் ஒவ்வொருமுறை அலைவானேன் என்று எண்ணி ஒரே நேரத்தில் மூவரையும் அழைத்துக் கொண்டு வந்தேன்" என்றார்.

முல்லாவினிடம் தான் முன்பு கூறிய முட்டாள்தனத்தை நினைத்துக் கொண்டான் செல்வன். முல்லாவின் மூளை எப்படி வேலை செய்கிறது என்பதை எண்ணிக் கருத்தாக நடந்து கொண்டான்.

5. கெட்டிக்காரர்

சிலர் கையெழுத்து முத்துக்கோத்தாற்போல இருக்கும். சிலர் கையெழுத்தோ, 'கோழி கிறுக்கியதா? குஞ்சி கிளறியதா?' என்று கேட்கும்படியாக இருக்கும்.

ஒரு வட்ட ஆட்சி அலுவலகத்தில் ஓர் எழுத்தர் இருந்தார். அவர் எழுதியதை எவரும் எளிதில் படிக்க முடியாது. அவர் கோப்பு எங்கே போனாலும் சரி, அவருக்கு அழைப்பு வந்து விடும். அவர் போய்த்தான் எழுதியதைப் படித்துக் காட்டிவிட் வருவார்.