உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 33.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126

இளங்குமரனார் தமிழ்வளம் - 33

திரு.வி.க.தம் கையெழுத்துத் திருத்தமாக அமையாதது பற்றி மிக வருந்தியுள்ளார். காந்தியடிகளும் தம் கையெழுத்தைப் பற்றி மிகவருந்தி எழுதியுள்ளார். 'இளமையில் கல்' என்பது கையெழுத்துக்கும் பொருந்தும். இளமையிலே கையெழுத்தைத் திருத்தமாக எழுதிப் பழகாவிட்டால், பின்னால் திருந்தாமலே போய்விடும். ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா? தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும் அல்லவோ?

இரண்டு சிறுவர்கள் வாதிட்டார்கள். "எங்கள் அப்பா கெட்டிக்காரர்" என்றான் ஒருவன். இல்லை, எங்கள் அப்பாதாம் கெட்டிக்காரர்” என்றான் இன்னொருவன்.

"எப்படிக் கெட்டிக்காரர்" என்று முதற்சிறுவனை ரண்டாம் சிறுவன் வினவினான். “எங்கள் அப்பா எழுத்தை எவரும் படிக்க முடியாது; ஆதலால் அவர் கெட்டிக்காரர் ல்லையா?" என்றான் முதற் சிறுவன்.

இரண்டாம் சிறுவன் கூறினார்; "உங்கள் அப்பா எழுதியதை எவரும் படிக்க முடியாததால் அவர் கெட்டிக்காரர் என்றாய். ஆனால் எங்கள் அப்பா எழுதியதை அவரே படிக்க முடியாது. ஆதலால், உங்கள் அப்பாவிலும் எங்கள் அப்பாதானே மிகக் கெட்டிக்காரர்" என்றான்.

இத்தகு சுவையான கதைகள் சில நம் நாட்டில் வழங்கு கின்றன. முல்லா கையெழுத்தில் மிகக் 'கெட்டிக்கார'ராக விளங்கியுள்ளார் என்பதை அவர் கதையொன்று காட்டுகின்றது.

கல்வியறிவில்லாத ஒருவன் முல்லாவினிடம் வந்தான். முல்லா! எனக்கு எழுதப்படிக்கத் தெரியாது. என் உறவினர் அயலூரில் உள்ளனர். அவருக்கு ஒரு கடிதம் நீங்கள் எழுதித்தர வேண்டும்" என்றான்.

முல்லா அவனிடம், "எனக்குக் கால்வலியாக இருக்கிறது. இப்பொழுது கடிதம் எழுத முடியாது" என்றார்.

"கையால்தானே யாரும் கடிதம் எழுதுவார்கள். கால் வலிக்கும் கடிதத்திற்கும் என்ன தொடர்பு இருக்கிறது? முல்லா என்ன காலாலா கடிதம் எழுதப் போகிறார்" என நினைத்துக் “கால் வலித்தால் கடிதம் எழுதுவதற்குத் தடை என்ன?” என அவன் வினாவினான்.

முல்லா, நகைத்தார். "உனக்குச் செய்தி தெரியாதா? நான் கடிதம் எழுதினால், அதனைப் பெற்றவனால் படிக்க முடியாது. பிறகு நானே நேரில் சென்றுதான் படித்துக் காட்டவேண்டும்.