உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 33.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முல்லாவின் கதைகள் முப்பது

133

ஆமாம், ஆமாம் என்று சொல்லியே எளிமையாகப் பிழைக்க வழியிருப்பதைத் தெரிந்துவிட்டால் பச்சோந்தி போன்றவர்கள் அந்த வழியை விட்டு வைப்பார்களா?

என்ன ஐயா,கறுப்புக் காக்கையைப் பார்த்து வெள்ளை என்கிறாயே; உனக்கென்று ஒன்றும் இல்லையா?" என்று கேட்பவர்களிடம் எவராவது 'ஆமாம்' என்று ஆடுவாரா?

ஆடுவார் இடத்துத்தானே ஆட்டம் நடக்கும்! படங் பார்த்துக்கொள்ளாமல்

இடத்தைப்

காட்டும் படங்காட்டுவது இல்லையே!

9. அறிபுடையவரை ஏமாற்ற முடியாது

யாரும்

ஒரு கிழவி வடை விற்றுக் கொண்டிருந்தாள். அங்கு ஒரு காக்கை வந்தது. அக்காக்கை கிழவி பராக்குப் பார்த்துக் கொண்டிருந்த நேரம் பார்த்து ஒரு வடையைத் தூக்கிக் கொண்டு பறந்து போயிற்று.

வடையைத் தூக்கிக்கொண்டு பறந்துபோன காகம் ஒரு மரத்தின் கிளையில் அமர்ந்தது. மரத்தின் அருகே ஒரு நரி வந்தது. 'காக்கை! காக்கை! நீ எவ்வளவு அழகாக இருக்கிறாய்; ஒரு பாட்டுப் பாடு என்றது. நரியின் புகழ்ச்சியால் மயங்கிய காகம் 'கா! கா!' எனக் கரைந்தது. வாயில் இருந்த வடை கீழே விழுந்துவிட்டது. நரி தூக்கிக் கொண்டு ஓடிவிட்டது!

எவருக்கும் வஞ்சகம் செய்யாதே, வஞ்சகம் செய்தால் வஞ்சகனுக்கு வஞ்சகன் வருவான் என்பதை விளக்கும். இது ஈசாப்பு நீதிக் கதையாம்.

இக்கதையில் ஒரு புதிய மாற்றம் இப்பொழுது செய்யப் பட்டுள்ளது. நரி காக்கையைப் பார்த்து, 'காக்கை! காக்கை! நீ எவ்வளவு அழகாக இருக்கிறாய்! ஒரு பாட்டுப் பாடு என்றது; என்றதும், காகம் வடையை மெதுவாகத் தன் காலின் கீழ் வைத்துப் பற்றிக் கொண்டு 'கா கா' எனக் கரைந்தது. பின்னர் வடையை எடுத்துக் கொண்டது. காகத்தை ஏமாற்ற வந்த நரி ஏமாறிப்போயிற்று" என்பது அது.

இப் புதுக்கதை போலவே முல்லாவின் பழங்கதை ஒன்று வழங்குகின்றது:

ஒரு நாள் முல்லா தட புடலாக நடந்து கொண்டிருந்தார். அவர் காலில் புதிய செருப்பு பளபளத்தது. அவர் செருப்பையும், நடையையும் கண்ட சிறுவர்களுக்கு வேடிக்கையாக இருந்தது.