உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 33.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134

  • இளங்குமரனார் தமிழ்வளம் - 33

79

ஒகு குறும்புச் சிறுவன் "முல்லாவை ஏமாற்றி அவர் அணிந் துள்ள செருப்பைத் தட்டிக்கொண்டு போக வேண்டும் என்றான், இன்னொருவன் "முல்லாவை மரத்தில் ஏறச் சொன்னால் செருப்பைக் கழற்றிப் போட்டுவிட்டு ஏறுவார். அதை எடுத்துக் கொண்டு ஓடிவிடலாம்" என்றான். அதனை மற்றைச் சிறுவர்கள் 'ஆமாம்' என்று ஏற்றுக் கொண்டனர்.

முல்லா சிறுவர்களை நெருங்கிவந்தார். அவர் வந்ததும் சிறுவர்கள் அவரைச் சூழ்ந்து கொண்டனர். “முல்லா! எங்களால் இந்த மரத்தில் ஏறமுடியவில்லை. நீர் மரம் ஏறுவதில் மிகத் திறமை வாய்ந்தவர் என்று பலரும் சொல்கிறார்கள். இந்த மரத்தில் ஏறு பார்க்கலாம்" என்றனர்.

சிறுவர்கள் ஏதோ சூழ்ச்சி செய்கிறார்கள் என்று முல்லா தெரிந்து கொண்டார். அவர்கள் தம் செருப்பையே கூர்ந்து பார்ப்பதையும் குறிப்பாக அறிந்தார். அதனால் "சிறுவர்களே, இந்த மரத்தில் தானே ஏறவேண்டும்; நான் ஏறுகிறேன் என்றார். 'முல்லா ஏமாந்து போனார்; அவரை எளிமையாக ஏமாற்றி விடலாம்” என்று சிறுவர்கள் மகிழ்ந்தனர். முல்லா செருப்புகளைக் கழற்றினார்; கைகளில் எடுத்தார்; தம் இடுப்பில் செருகிக் கொண்டு மரத்தில் ஏறினார்.

சிறுவர்கள் முல்லாவின் செயலைக் கண்டு திகைத்தனர். 'முல்லா! மரத்தின்மேல் நடைபாதை ஒன்றும் இல்லையே! செருப்பை எதற்காக எடுத்துக் கொண்டு போகவேண்டும்; கீழே போட்டுவிட்டுச் செல்லலாமே" என்றனர்.

"கீழே போட்டுவிட்டுச் செல்லலாம்; ஒரு வேளை மரத்தின் மேல் நடைபாதை இருந்தால் என்ன செய்வது? அதற்காகவே எடுத்துக் கொண்டு போகிறேன் என்றார். சிறுவர்கள் ஏமாற்ற மடைந்தனர்.

சிறந்த அறிவாளிகளையும், குறிப்பால் அறியும் திறம் உடையவர்களையும் ஏமாற்றுவது எளிமை ல்லை என்பது முல்லாவின் கதையால் விளங்கும்.

10. இயற்கையின் அருமை

குதிரைக்குக் கொம்பு இல்லை; ஆனால் மானுக்கு அருமையான கொம்பு உண்டு! ஏன்; குதிரைக்கும் கொம்பு இருந்தால் என்ன?

இப்படி வினவினால், "குதிரையின் குணத்தைத் தெரிந்து

தான் கொம்பைப் படைக்கவில்லை” என்

று

விடை கூறுகின்றனர்.