உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 33.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

முல்லாவின் கதைகள் முப்பது

135

'ஆட்டுக்கு வால் குட்டை; மாட்டுக்கு வால் நெட்டை; ஏன் இப்படி இருக்கவேண்டும்" என்று கேட்டால், "ஆட்டுக்கும் மாட்டுக்கும் வாலை அளந்துதான் வைத்திருக்கிறான் ஆண்டவன்' என்று மறுமொழி தருகின்றனர்.

யற்கையின் படைப்பு விந்தையானது. சில விந்தைகள் வெளிப்படையாகத் தெரியும். சில விந்தைகள் வெளிப்படத் தெரியமாட்டா! வெளிப்படத் தெரியாமையால் இயற்கையை அல்லது இறைவன் படைப்பைக் குற்றம் சொல்லலாகாது என்று கூறுவர். இக்கருத்து நம் நாட்டுக்கு மட்டுமே உடைமையானது? இல்லை! இக்கருத்து, பொதுக்கருத்து என்பதை முல்லாவின் கதையொன்று விளக்குகின்றது.

முல்லா, ஒரு மல்பெரி மரத்தின் நிழலில் படுத்திருந்தார்; படுத்துக்கொண்டே மேலே பார்த்தார். மல்பெரிப் பழங்கள் நிரம்ப இருந்தன. "மல்பெரி மரம், எவ்வளவு பெரியது? இதன் பழம் எவ்வளவு சிறியது? பெரிய மரத்திற்குத் தக்கபடி பெரிய பழமாக இறைவன் படைக்கவில்லையே” என்று எண்ணினார்.

பின்பு முல்லாவின் பார்வை மல்பெரி மரத்தை விட்டு அதன் பக்கத்தே பரவியது. அங்கே பூசுணைக்கொடி இருந்தது. அதில் பெரிய பெரிய காய்கள் காய்த்திருந்தன. "இந்தச் சின்னக் கொடியில் இவ்வளவு பெரிய காயா? என்ன முரண்பாடு? பெரிய மரத்தில் சின்னஞ் சிறிய பழம்; சின்னஞ் சிறு கொடியில் பென்னம் பெரிய காய்" என்று இயற்கையின் படைப்பைப்பற்றி எள்ளி நகைத்தார்.

சிறிது பொழுது சென்றது; முல்லா கண்ணயர்ந்து உறங்கினார்; காற்று மெல்லலென வீசியது; மல்பெரி மரத்தில் ருந்து ஒரு பழம் முல்லாவின் கண்ணிமை மேலே விழுந்தது; திடுக்கிட்டு விழித்தார். அதிர்ந்து போனார். நல்லவேளை, நான் பிழைத்தேன். மல்பெரிப் பழம், பூசுணைப் பழம்போல இருந்தால் - பெரிய மரத்திற்குத் தக்கபடி பெரிய பழமாக இருந்தால் என் கண் என்ன ஆகியிருக்கும்? தலையே நொறுங்கியிருக்குமே! நிலத்தில் படரும் கொடியில் பெரிய பழம்; நெடு மரத்தில் சிறிய பழம் என்பது வியப்பான படைப்பு மட்டுமல்ல, மிகப் பாதுகாப்பான படைப்புமாகும்! என்று எண்ணி வியப்புற்றார். முன்னே தாம் எண்ணிய அறியாமையை நினைத்து வருந்தினார்.

இயற்கை தன் ஆற்றலையும் விந்தைகளையும் எத்தனை எத்தனையோ வகைகளில் மறைத்து வைத்திருக்கின்றது. அவற்றை எவ்வளவு எண்ணி எண்ணிப் பார்த்தாலும் அறிந்தவற்றைப்