உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 33.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிற்றருவி

குழந்தையர் பாடல்)

சாரல்

உலகம் கண்ட முதல் நிலம் 'மலை'.

மலையும் மலைசார்ந்த இடமும் குறிஞ்சி எனப்படும். குறிஞ்சியின் அழகும் வளமும் சொல்லி முடியாது. குறிஞ்சிக்குத் தனி அழகு அருவி.

தமிழ் மண்ணுக்கு வாய்த்த அருவி வளங்களுள் தலையாயது குற்றாலம்!

குற்றாலத்து அருவி ஒன்றா, இரண்டா?

சிற்றருவி, புலியருவி, ஐந்தருவி, தேனருவி, முதன்மை அருவி, செண்பக அருவி, பழைய குற்றால அருவி எனப்பல.

அருவிப் பெயர்கள் என்னுள் உருவி நின்றன. முதன்மை அருவி ததும்பி விழும் இடம் பொங்குமா கடல்! அதுவும் இணைந்தது.

ஐம்பது ஆண்டுகளுக்கு முன் தொட்டுப் பாடிய பாடல்கள் பல்லாயிரம்!

அவற்றுள் குழந்தைகளுக்குரிய பாடலின் ஒரு சிறு தொகுதி 'சிற்றருவி' என்னும் பெயரால் வெளிப்படுகின்றது. இதன் இரண்டாம் தொகுதியும் வரும்.

எழுச்சிப் பாடல்கள் 'புலியருவி'

காதல் பாடல்கள் 'தேனருவி'

பலவகைப் பாடல்கள் 'ஐந்தருவி'

மெய்யுணர்வுப் பாடல்கள் ‘பொங்குமா கடல்'