உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 33.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

164

66

இளங்குமரனார் தமிழ்வளம் - 33

சரியான ஊமையான இவன் உம்மை எப்படித் திட்டி யிருப்பான்; நீர் பொய்வழக்குத் தொடுத்து அவனுக்குத் தொல்லை கொடுத்துவிட்டீர். இவ்வழக்கைத் தள்ளுபடி செய்கிறேன்' என்றார் நீதிபதி.

குற்றவாளி சார்பில் சென்ற வழக்கறிஞர் தம் ஏற்பாடு வெற்றியாக நடந்து முடிந்ததற்கு மகிழ்ந்தார். வீட்டிற்குச் சென்றதும் தம் கட்சியில் இருந்த குற்றவாளியைப் பார்த்து, தமக்குத் தரவேண்டிய கட்டணத்தைக் கேட்டார். குற்றவாளியோ, 'பே-பே' என்று பழைய பாடத்தையே சொன்னான்.

"நீ என்ன நான் கற்றுத்தந்ததை என்னிடமே சொல்கிறாயா? ஒழுங்காகப் பணத்தைக் கொடு" என்றார். மீண்டும் அவன் 'பே- பே' என்றான்.படித்த பாடத்தை விடலாமா?

முல்லாவும் இப்படியே ஒருமுறை நடந்து கொண்டார்.

முல்லா புதிதாக நீதிபதியாகியிருந்தார். அவர் தம்மிடம் முதன்முதலாக வந்த வழக்கை விசாரித்தார். பதவிக்கு வந்தவுடனே பொல்லாப்பை வாங்கிக் கட்டிக் கொள்ள வேண்டுமா? அதனால், வழக்கை எடுத்துக் கூறிய வழக்காளனிடம் 'நீ சொல்வது சரி' என்றார்.

அதனை மறுத்துப் பேசினான் எதிரி. அதை அமைதியாகக் கேட்ட முல்லா, 'நீ சொல்வதும் சரி' என்றார்.

66

இது து என்ன வேடிக்கை! வழக்கைத் தொடுத்தவன் சொல்வதும் சரி; அதனை மறுத்துக் கூறுபவன் சொல்வதும் சரி என்று எவராவது தீர்ப்பு வழங்குவார்களா? எங்காவது இப்படி நடக்குமா?" என்று நீதிமன்றப் பணியாள் ஒருவன் கூறி அவன் கூறியதைக் கேட்ட முல்லா, 'நீ சொல்வதும் சரி' என்றார்.

சரிசரி என்று வாழ்வில் பேசுவது நல்லதுதான்! ஆனால், அறமன்றத்திலும் 'சரிசரி' என்பது சரியாகுமா? சரி என்றுதான் முல்லா சொல்லியிருக்கிறார்.

29. தண்ணீர்! தண்ணீர்!

அரசர் ஒருவர் வேட்டைக்குச் சென்றார். அவரைத் தேடி, புலவர் ஒருவர், காட்டுக்கே சென்றார். அரசர் வேட்டையில் கருத்தாக இருப்பதைக் கண்ட புலவர், அவர் கருத்தைத் தம் பக்கம் இழுக்கப் புலி! புலி! என்று கத்தினார். அரசர் சுற்று முற்றும் பார்த்தார். புலியைக் காணவில்லை. புலவரைத் தாம் கண்டார்.