உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 33.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முல்லாவின் கதைகள் முப்பது

163

விட்டது; காளையின் நிலைமை மிக இக்கட்டாக இருக்கிறது என்றார்.

அண்டை வீட்டுக்காரர் முல்லாவின் காளை வலுவானது; விலைமிக்கது. அது நம் பசுவால் காயப்பட்டிருந்தால் அதற்குக் கண்டபடி இழப்புத் தொகை கேட்பார். அதற்குத்தான் வந்திருக்கிறார். கட்டாயம் பிடி கொடுக்கக் கூடாது என்று தீர்மானித்தார்.

"ஐயா, மாடுகள் என்ன நம்மைப்போல் பகுத்தறிவுடை யவையா? இது செய்யலாம்; இது செய்யக்கூடாது என்று தெரிந்தவையா? இல்லையே? ஏதோ விலங்குக்கு இயல்பான உணர்ச்சியால், முட்டி விட்டது. இதனையெல்லாம் நாம் பொருட்டாக எண்ணலாமா? நண்பரே, இதனைப் பெரிது படுத்தி வருந்த வேண்டாம். நடந்தது நடந்துவிட்டது; போகட்டும் என்றார் பக்கத்து வீட்டுக்காரர்.

"நல்லது; நீங்கள் சொல்வதும், என் கருத்தேதான். அறிவில்லாத விலங்குகளின் செயலால் நாம் பொருட்டாக எண்ண வேண்டியதில்லைதான். ஆனால் ஒன்று; நான் உங்களிடம் சொல்லியதில் ஒரே ஒரு திருத்தம். எங்கள் காளை உங்கள் பசுவை முட்டிக் காயப் படுத்திவிட்டது; அவ்வளவு தான்' என்றார்.

அண்டை வீட்டுக்காரர் என்ன சொல்வார்? சற்று முன்னர்த் தானே "இதனையெல்லாம் நாம் பொருட்டாக எண்ணலாமா? என்றார்.இனி மாற்றிச் சொல்ல முடியுமா? முல்லாவின் தந்திரம் வெற்றிகொண்டது. வீறுநடையில் அவர் சென்றார்.

28. ‘எல்லாம் சரிதான்’

ஒருவன்மேல், 'தாறுமாறாகப் பேசினான்' என வழக்கு நடந்தது. அவனுக்கு? அவன் வழக்கறிஞர், "நீதிமன்றத்தில் யார் உன்னிடம் என்ன கேட்டாலும் சரி; 'பே-பே' என்று சொல்லிவிடு. வாய் திறந்து ஒரு சொல்லும் சொல்லாதே. எல்லாவற்றுக்கும் 'பே-பே' என ஊமை போல் பேசினால் உன் மேலுள்ள வழக்குத் தள்ளுபடியாகிவிடும்" என்றார். அப்படியே நடந்துகொள்வதாகக் குற்றவாளி கூறினான்.

நீதிமன்றத்தில் குற்றக் கூண்டில் குற்றவாளி நின்றான். வழக்கறிஞர், நீதிபதி முதலிய யார் யார் என்ன கேட்டாலும் அவன் 'பே-பே' என்றே சொன்னான்.