உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 33.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

162

66

இளங்குமரனார் தமிழ்வளம் - 33

'அருச்சுனா, இந்த முதியவனைப் பார். அவன்தன் குழந்தையை வைத்துக்கொண்டு தீயை ஏன் சுற்றி வருகிறான்; கேட்டு வா" என்றான் கண்ணன். அருச்சுனன் அம் முதியவன் அருகே சென்றான்.

முதியவன், தன் மகன் இறந்துவிட்டதாகவும் அதனால், தான் உயிர்வாழ விரும்பாமல் அச்சிறுவனுடன் தானும் தீயில் விழுந்து சாகப்போவதாகவும் சொன்னான். உடனே அருச்சுனன், "மகன் இறந்ததற்காகத் தந்தை சாவதா? ஒருவருக்காக ஒருவர் சாவது என்றால் உலகில் யாராவது இருப்பார்களா? எப்படிப் பட்ட அன்புடைய பிள்ளையாக இருந்தாலும் அதற்காகச் சாகப்போகும் தந்தையுண்டா?" என்று தடுத்தான்.

"நீ என்னைத் தடுக்கிறாய்; இப்படி உலகில் யாராவது செய்வார்களா, என்கிறாய். உனக்கு இப்படி நேர்ந்தால் தான் தெரியும். ஊருக்கு யாரும் சொல்லிவிடுவார்கள். அவரவருக்கு வரும்போதுதான் தெரியும்; அவர்கள் நிலைமை வேறாக இருக்கும்!" என்றான் முதியவன்.

"நீ என்ன சொல்கிறாய்? உன்னைப்போல் நான் ஒரு பொழுதும் இருக்கப் போவதில்லை. எனக்கு இத்தகைய நிலைமை ஏற்பட்டாலும் அப்பொழுதும் இந்த உறுதியோடு தான் இருப்பேனே ஒழிய, உன்னைப்போல் கோழையாகச் சாக மாட்டேன்" என்றான். பின்னர் முதியவனைத் தீயில் விழாமல் காப்பாற்றிவிட்டுச் சென்றான்.

அருச்சுனன் ஊரையடைந்தபின், அன்றைய போரில் அவன் மகன் அபிமன்யு இறந்தான் என்ற செய்தியைக் கேள்விப் பட்டான்; மிகமிக வருந்தினான். மகனைப் பறிகொடுத்த பின்னர் தான் உயிர் வாழப் போவதில்லை எனத் துடித்தான். அந்நிலையில், முன்னே கண்ட முதியவன் வந்து தன்னிடம் தந்த வாக்குறுதியை நினைவூட்டினான். அதனால் அருச்சுனன் சாவதைத் தவிர்த்தான்.

இச்செய்தி பாரதத்தில் காணப்படுகிறது. முன்னே ஒரு செய்தியைச் சொல்லி உறுதிப்படுத்திக் கொண்டு பின்னர் அவ்வுறுதியாலேயே தாம் நினைத்ததை நிறைவேற்றிக் கொள்வது ஒரு வழிமுறையாகும்; அம்முறையை விளக்கும் முல்லா கதையொன்றும் உண்டு;

முல்லா தம் வீட்டுக்குப் பக்கத்து வீட்டில் நுழைந்தார். அவ்வீட்டுக்காரரிடம், "உங்கள் பசு, கட்டை அவிழ்த்துக் கொண்டு வந்தது, எங்கள் காளைமேல் பாய்ந்து காயப்படுத்தி