உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 33.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முல்லாவின் கதைகள் முப்பது

161

"பனைமரத்தில் என் கன்றுக்குப் புல் பறிக்க ஏறினேன்" என்றான் மரத்தில் ஏறியவன். "ஓ ஓ! பனைமரத்தில் தான் நிரம்பப் புல் இருக்குமோ, நீ பறித்த புல் எங்கே?" என்றான் தோட்டக்காரன். 'பனைமரத்தில் புல் இல்லாததால்தானே திரும்புகிறேன் என்றான் மரமேறியவன்.

இப்படியே முல்லாவும் ஒரு முறை நடந்து கொண்டார்.

ஒரு தோப்பில் புகுந்து பழங்களைத் திருட விரும்பினார் முல்லா. தோப்பைச் சுற்றிலும் நெடுஞ்சுவர் இருந்தது. அதனைத் தாண்டுவதற்காக ஏர் ஏணியை எடுத்துக்கொண்டு போனார். ஏணியைச் சாய்த்துச் சுவர்மேல் ஏறினார். இனிச் சுவரில் இருந்து இறங்க வேண்டுமே! அதற்காக ஏணியை எடுத்துச் சுவர்மேல் தூக்கிக் கீழே தோட்டத்துள் இறக்குவதற்குப் போனார். இந்நிலையில் தோட்டக்காரன் பார்த்துவிட்டான்.

"ஏணியைத் தூக்கிக்கொண்டு சுவரின்மேல் ஏன் நிற்கிறீர்?

என்றான் தோட்டக்காரன்.

"ஏணியை ஏலம் போட்டு விற்கப்போகிறேன்."

"ஏணியைத் தோப்பிலா விற்பார்கள்?"

"ஏன், விலைக்குப் போகுமானால் எங்கும் விற்கலாம்; சந்தையில்தான் விற்கவேண்டும் என்று சட்டம் இருக்கிறதா?” என்றார் முல்லா.

தோட்டக்காரனுக்கு மறுமொழி சொல்ல ஒன்றும் தெரிய வில்லை! “ஏணியை இங்கே எவர் வாங்கப் போகிறார்!" என்றான்.

"எவரும் வாங்காததால்தான் எடுத்துக் கொண்டு போகப் போகிறேன் என்று சுவரை விட்டு இறங்கி நடந்தார் முல்லா.

'வாய்த்தால் நமக்கு; வாய்க்காவிட்டால் பிள்ளையார்க்கு' என்பது நம் பழமொழி. இதுபோலவே "பழம் கிடைத்தால் சரி; இல்லையானால் போகிறது" என்று முடிவு கட்டிக்கொண்டார் முல்லா.

27. உனக்கு நேர்ந்தால் தெரியும்

அருச்சுனன் தேரில் வந்து கொண்டிருந்தான். கண்ணன் தேரோட்டினான். கண்ணன் கட்டளைப்படி இந்திரன் ஒரு முதியவனாக வந்தான். தேர் வரும் வழியில் தீ வளர்த்து, அத்தீயைச் சுற்றி வலம் வந்துகொண்டு இருந்தான் இந்திரன். அவன் கையில் ஒரு சிறுவன் பிணம் இருந்தது.