உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 33.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

160

இளங்குமரனார் தமிழ்வளம் - 33

வீட்டுக்காரர் முல்லாவினிடம் ஓடிவந்தார்."நீர் என்ன செய்கிறீர்? வீடே ஆடும்படி இடிப்பானேன்?" என்றார்.

"அது என் விருப்பம்; அதனால் உமக்கு வந்ததென்ன? என் வீட்டில் நான் இடிக்க உரிமை இல்லையா? நீர் போய் உம் வேலையைப் பாரும்" என்றார் முல்லா. மாடிக்காரர் தம் தவற்றை உணர்ந்து மன்னிப்புக் கேட்டார். முல்லா அவருக்கு அறிவுறுத்தத் தானே இடித்தார்; பிறகும் இடித்தால் அவருக்கு என்ன நன்மை? அவர் வீடும் அழியத்தானே செய்யும்? அதனால் அடிப்பதை நிறுத்திவிட்டார்.

25. சட்டினி என்ன விலை?

சிற்றுண்டிச் சாலைக்குள் சிற்றூரான் ஒருவன் போனான். அவனுக்குப் பசியாக இருந்தது. ஆனால் கையில் பணமில்லை. கடைக்காரனிடம் 'இட்டிலி என்ன விலை?' என்று கேட்டான். இட்டிலி 15 காசு' என்றான் கடைக்காரன். 'சட்டினி விலை என்ன?' என்றான் வந்தவன். 'சும்மா' என்றான் கடைக்காரன்.

"எனக்கு இட்டிலி வேண்டாம்; சட்டினி கொடு" என்றான் வந்தவன். இட்டிலி வாங்கினால் தானே சட்டினி தருவான் கடைக்காரன்? இச் சிற்றூரான் கதைபோல முல்லா கதை ஒன்றும் சொல்லப் பெறுகிறது:

முல்லாவுக்கு இசைகற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. இசையாசிரியர் ஒருவரைத் தேடிச் சென்று சை கற்றுக் கொள்வதற்குக் கட்டணம் எவ்வளவு என்று கேட்டார். இசையாசிரியர், முதல் மாதத்திற்கு ஐந்து பொன்; பின்னால் ஒவ்வொரு மாதத்திற்கும் ஒரோர் பொன் என்றார்.

முல்லா எண்ணிப்பார்த்தார். இசையாசிரியரிடம், 'எனக்கு ரண்டாம் மாதம் முதல் கற்றுத் தரும் இசையைக் கற்றுத் தாருங்கள். முதல் மாத இசை வேண்டாம்' என்றார். இப்படிப் பட்ட முல்லலை இசையை எப்படிக் கற்றிருப்பார்?

26. ஏணியை ஏலத்தில் விற்கப் போகிறேன்

பனைமரத்தின் மேல் ஒருவன் ஏறினான். பதநீரைப் பருகவும், நுங்குக் காயைப் பறிக்கவும் கருதியிருந்தான் அவன்.

மரத்தின் மேல் திருட்டுத்தனமாக ஒருவன் ஏறுவதைத் தோட்டக்காரன் கண்டு விட்டான். "ஏன் மரத்தில் மேல் ஏறுகிறாய்? என்றான்.