உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 33.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முல்லாவின் கதைகள் முப்பது

159

பசுமாட்டின் முகத்தில் ‘படார்' என ஓர் அறை அறைந்தான். அறைந்தவுடனே மாடு வெருண்டு 'படார்' என்று கறப்பவனை உதைத்து, உருட்டியது. கறப்பதற்காகக் கையில் வைத்திருந்த செம்பு எங்கேயோ போய் வீழ்ந்து உருண்டது.

பால் கறக்கப்போய்ப், பல் உடைபட்ட கறவைக்கார கண்ணன், உடலில் பட்ட புழுதியையும் கொட்டிய குருதியையும் துடைத்துக் கொண்டு சினத்துடன் வந்தான். "கறக்கும் போது இப்படியா மாட்டை அடிப்பார்கள்?" என்றான்.

"மாட்டின் முன்பகுதி என்னுடையது. அதில் நான் எதுவும் செய்வேன். அதனைக் கேட்பதற்கு நீ யார்?" என்றான் மணியன். 'சூழ்ச்சிக்குச் சூழ்ச்சி; வம்புக்கு வம்பு' என்று தெளிந் தவர்கள் கூறும் கதை இது.

முல்லாவின் கதையொன்றும் இத்தகையதே.

முல்லாவும் இன்னொருவரும் ஒரு வீட்டில் குடியிருந்தனர். முல்லா வீட்டின் அடித்தளத்தில் குடியிருந்தார். மேல் தளத்தில் (மாடியில்) இன்னொருவன் குடியிருந்தார்.

மாடியில் குடியிருந்தவர் தம் வீட்டுப்பகுதியில் ஒருநாள் மாவு இடித்தனர். "வீடே இடியும்படி மாவிடிக்க வேண்டுமா? கீழே இருப்பவர்களுக்கு இவ்விடி துயர் தருமே எனச் சிறிதும் எண்ணவில்லையே என்றார் முல்லா.

அப்பொழுது, முல்லா அமைதியாகப் படித்துக் கொண்டி ருந்தார். அவர்க்கு மாவு இடிக்கும் ஒலி, 'இடியொலி' போலவே இருந்தது. பொறுத்துப் பொறுத்துப் பார்த்தார்; நிறுத்துவதாகத் தெரியவில்லை; நேரே மாடிக்குப் போனார்; "ஏன்; சற்றே மெல்லென இடிக்கக்கூடாதா? கீழே எவ்வளவு அதிர்கின்றது. வீடே ஆடுகின்றது. கீழே குடியிருப்பவர்களுக்குத் தொல்லை என்பது உங்களுக்குத் தோன்றவில்லையா?" என்றார் முல்லா.

மாடியில் யில் இருந்தவர், "முல்லா, இது எங்கள் உரிமை யானது, இவ்வீட்டில் நாங்கள் எங்கள் வசதிபோல் இடித்துக் கொள்ள உரிமையுண்டு; உமக்கு என்ன வந்தது? போய் உம் வேலையைப் பாரும். எங்கள் உரிமையில் தலையிடாதீர்" என்றார்.

முல்லா 'சரி! சரி!' என்று கீழே போனார். ஒரு பெரிய கடப் பறையை எடுத்துக் கீழ் வீட்டுச் சுவரை இடித்தார். இடிக்கும் ஒலி மேல் வீட்டுக்காரருக்குக் கேட்டது; கட்டடமே ஆடியழ.. மேல்