உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 33.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158

இளங்குமரனார் தமிழ்வளம் -33

"ஆ! ஆ! ஊருக்கு ஏற்ற நல்ல நீதிபதி இந்த முல்லாவே" என்று எல்லாரும் ஒருமுகமாக எண்ணி முல்லைவை நீதிபதியாக்கினர்.

சில நாள்கள் சென்றன. முல்லா மீன்வலையைத் தூக்கி எறிந்துவிட்டார். ஊர்க்காரர்கள், "முல்லா, அரசர் அனுப்பிய பெரியவர்கள் வந்தபோது மீன் வலையோடு வந்தீர். அவர்கள் உம்மை ஊரின் நீதிபதியாக்கி வைத்தனர். ஆனால் இப்பொழுது மீன்வலையை எடுத்தெறிந்து விட்டீரே ஏன்?" என்றனர்.

56

"ஆம்! நான் பிடிக்க வேண்டிய மீனைப் பிடித்து விட்டேன். இனி வலை வேண்டியதில்லை என்பதால் அதனை எடுத்தெறிந்து விடடேன்" என்றார். முல்லாவின் திறமையான வேலையைக் கண்டு ஊரார் மூக்கில் விரல் வைத்து நோக்கினர்.

முல்லா தாம் விரும்பிய மீனைத்தான் (பதவியைப்) பிடித்துவிட்டாரல்லவா!

24. அது என் விருப்பம்

ஓர் ஊரில் கண்ணன் மணியன் என்னும் இருவர் சேர்ந்து ஒரு பசுமாடு பிடித்தார்கள். இருவரில் ஒருவனாகிய கண்ணன் மற்றொருவனை ஏமாற்ற நினைத்தான். கண்ணன் மணியனைப் பார்த்து 'உனக்கு மாட்டின் முன்பகுதி உரிமையானது. முன் பகுதியை நீ நன்றாக கவனித்துப் போற்றி வளர்க்க வேண்டும். பின் பகுதியை நான் நன்றாகக் கவனித்துக் கொள்கிறேன்" என்றான்.

பசுவின் முன்பகுதியில் வாய் இருக்கிறது. அதனால் தீனியையும், தண்ணீரையும் வைத்து வளர்க்க வேண்டியவன் மணியன்; பால் கறந்து பிழைத்துக்கொள்ள வேண்டியவன் கண்ணன் என்றாகியது.

மணியன் தன் கூட்டாளியின் சூழ்ச்சியை எண்ணி வெம்பினான்; வெதும்பினான்; "சரி, பார்க்கலாம். எப்படிப் பால் கறந்து காசு தேடுகிறான் என்பதை அறிந்துவிடலாம்" என நினைத்தான்.

பால் கறக்கும் வேளை வந்தது. மணியன் நன்றாகத் தீனிபோட்டு நீர் விட்டு வயிற்றை நிரப்பியிருந்தான். மடுவில் பால் கட்டிப் போயிருந்தது. கன்றைவிட்டுப் பால் சுரந்ததும் பாலைக் கறப்பதற்குக் கலத்தோடு போய்ப் பசுவின் கால்களுக்கு இடையே அமர்ந்தான் கண்ணன். முன்பகுதிக்கு உரிமையாள னாகிய மணியன் மாட்டின் முன்னே நின்று மாட்டைத் தடவிக் கொடுத்துக் கொண்டிருந்தான். பாலைக் கறப்பதற்குக் கண்ணன் காம்பில் கைவைத்தானே இல்லையோ அப்பொழுது மணியன்,