உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 33.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முகவண்ணம்

“ஏழுநிற வில்லாய்

ஏதுக்கடா தோன்றும்

வாழுமழை பெய்து

வானம்துளி விட்டால் வீழும்கதிர் பட்டு

வில்லாய்அது தோன்றும்?”

என்பது வானவில் காட்சி.

வானவில்லைத் 'திருவில்' என்று கூறும் புறநானூறு. "திருவில் அல்லது கொலையில் அறியார்" என்பது அது. "திரு என்பது கண்டாரால் விரும்பப்படும் தன்மை நோக்கம்; என்றது அழகு" என்பது பேராசிரியர் விளக்கம்.

மதுரை, டோக் பெருமாட்டி கல்லூரி, 'முத்தமிழ் விழா'வின் (19-2-1972) பாட்டரங்கில் வானவில் பற்றிப் பாடினேன்!

எடுத்தவில், ஏந்துவில், தொடுத்தவில், தொல்லைவில், துணிந்தவில், முடிப்புவில் என்னும் அறுவகையில் பகுத்துப் பாடிய அதில் 'தொடுத்தவில்' என்பதில் மட்டும் முப்பத்திரண்டு வகையில் உவமை உருவகங்கள் தொடுத்துப் பின்னிக் கிடந்தன. அப்பகுதி, இத்தொகுப்பின் இறுதிப் பகுதி; அப்பகுதிப் பெயரே நூற்பெயரும் ஆயது.

ஏழுவண்ண வில்லின் ஊடகம் ஒரு வண்ணம். ஆம்! ஒரே வண்ணம்! வெள்ளை வண்ணம்!

பால் வண்ணக் கதிர் தந்த எழுவண்ணமும் என்ன சொல்கின்றன!

ஏழென்ன, எழுபது எழுநூறு எனினும் என்ன, பால் வண்ணமே, மேல்வண்ணம்! எவ்வண்ணத்திற்கும் தாய் வண்ணம் என்கின்றன!