உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 33.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60

இளங்குமரனார் தமிழ்வளம் - 33

இங்கே தமிழ் வண்ணம் பல வண்ணமாக உருக்கொண்டு

கருத்துக்கு விருந்தாகின்றன.

உரையாடல் உண்டு.

உரைப்பாட்டு உண்டு.

உள்குதல் உண்டு.

உள்ளுறை உண்டு.

உளவியல் உண்டு.

வெளிப்பாட்டு விளக்கம் உண்டு.

வினாவி நிற்பன உண்டு.

அறிவுறுத்துவன உண்டு.

ஆக்கமுரைப்பன உண்டு.

பலவண்ண வடிவும், பலவண்ணக் கருத்தும், பலவண்ண நடையும் உடைய தொகுப்புக்கு, எப்பெயர் தகும்?

வானவில்' என்பது தகுந்தானே!

வண்ணத்தால் வானவில்லாகக் கவர்ந்தாலும் கவர்க; கவராது ஒழியினும் ஒழிக.

எண்ணத்தால் மறைந்தொழியா வானவில்லாக ஒரு வேனும் நிற்கும் எனின், இவ்வெளியீட்டின் பேறு அது!

சில

இவ்வெளியீட்டுக்கு உதவிய ஒப்புரவாளர் திருமலி ம.பொன்னையா அவர்கள். தம் பெயரையே இயல்பாக அமைந்த அப்பெருமகனார், வள்ளுவ வழியர்; வள்ளுவ மொழியர்; வள்ளுவத் தொண்டர்; வள்ளுவ வாழ்வர்.

இராச பாளையத்தில் வள்ளுவர்க்குக் கோட்டம் எடுத்த பாட்டுடைச் செம்மல் திருவள்ளுவர் மன்றத் தலைவர். எளியேன் 'பாவாணர் ஆராய்ச்சி' 'நூலகத்தைத்' திருநகரில் நிறுவிய போது (26-6-'83) அதற்கென, அருங்கொடையாக மூவாயிர உருபா வழங்கினவர். அவ்வள்ளன்மை உள்ளகம் ததும்ப வெளிப்படுவது இவ் 'வானவில்' வெளியீடாகும். இவ்வண்ணப் பயனும் எண்ணப் பயனும், அவர்தம் கொடைக் கொடை என்க!

பாவாணர் ஆய்வு நூலகம்,

திருநகர்,

LD FIT - 625 006.

தமிழ்த் தொண்டன்

இரா. இளங்குமரன் 3-12-1991