உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 34.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவர் வழியில் வள்ளலார்

85

திருமண வீட்டுள் புக மனமில்லாராய் எதிர்வீட்டுத் திண்ணையில் அமர்ந்தார். அவரை அறிந்த ஒருவர், திருமண வீட்டார்க்குச் சொல்லச் சென்றார். அவரிடம் வள்ளலார் ஒரு பாடலைப் படைத்துத் தந்து மணவீட்டுத் தலைவருக்கு விடுத்தார். எளிமையும் அருமையும் வாய்ந்த அப்பாடல்:

"சோடில்லை மேல்வெள்ளைச் சொக்காயில்லை நல்ல சோமனில்லை பாடில்லை கையிற் பணமில்லை தேகப் பருமனில்லை ஈடில்லை யாதொரு வீறாப்பு மில்லை விவாகமது

நாடில்லை நீநெஞ்ச மேஎந்த வாறினி நண்ணுவையே”

சோடு, மிதியடி ; சொக்காய், சட்டை; சோமன், வெண்பட்டாடை; பாடு, உயர்பதவி; ஈடு, தோற்றப் பொலிவு; வீறாப்பு, பெருமிதம்; "நெஞ்சமே, இவையில்லை; இனி எப்படித் திருமண வீட்டை அடையக் கூடும்? இவையெல்லாம் இருந்தால் அல்லவோ அடைய வாய்க்கும்" என்னும் இப்பா என்ன கருத்தை வெளிப்படுத்துகின்றது?

ஆளை மதிக்காமல், ஆடம்பரத்தை மதித்துப் போற்றும் போலித் தன்மையால் நிகழும் உலகியலை வெளிப்படுத்து கின்றது.இது,

“உருவுகண் டெள்ளாமை வேண்டும்உருள் பெருந்தேர்க்கு

அச்சாணி அன்னார் உடைத்து

""

என்னும் குறட்கருத்துக்கு விளக்கமாக அமைகின்றதாம்! அச்சாணி இல்லாத தேர் முச்சாணும் ஓடாது. அவ்வச்சாணி அன்னாரும் உருவப் பொலிவின்மையால் ஒதுக்கப்படுதல் மட்டுமன்றி இகழப்படுதலையும் குறித்தாரே வள்ளுவர். அதைச் 'சோடில்லை' என்னும் வள்ளலார் பாட்டு பலவகையாலும் விளக்குதல் அறியக் கூடியதன்றோ!

குறிப்பிற் குறிப்பு

செல்லும்

திருவொற்றியூர்த் திருக்கோயிலுக்குச் போதெல்லாம் வள்ளலார் தேரடித் தெருவழியாகச் செல்வதில்லை. தென்னண்டை மாடவீதி நெல்லிக்காய் பண்டாரம் சந்து வழியாகவே செல்வார். தற்செயலாக ஒரு முறை தேரடி வீதி வழியாகச் சென்றார். அத்தெருத் திண்ணை ஒன்றில் நெடுநாளாக இருந்து வந்தவர் உடையிலாத் துறவி ஒருவர். அவர் அவ்வழியே போவார் வருவாரைக் குறிப்பில் குறிப்பு உணர்ந்தாராய்க்