உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 34.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84

இளங்குமரனார் தமிழ்வளம் - 34 ஓ

உணர்ந்து கொண்ட வள்ளலார் உறங்குவார் போலக் கிடந்தார். வலக்காது மேலே இருந்தது. அதில் இருந்த கடுக்கனைக் கழற்றிக் கொண்டான். அதனை அறிந்த வள்ளலார் புரண்டு படுப்பார் போல இடக்காது மேலே வரப் புரண்டார். அதனையும் கழற்றிக் கொண்டு போனான்.

66

'காதுகளுக்கு இரு துளைகளை அமைத்த இறைவன் காதணிகலம் போடுவதற்குச் சம்மதமுடையவனாக இருந்தால் அதற்கெனத் துளையமைத்திருக்க மாட்டானா? அப்படி அமைக்காமையால் காது மூக்குகளில் துளையிட்டு அணிகலம் து அணிதல் ஆண்டவனுக்குச் சம்மதமானதன்று" என்று பின்னாளில் கூறும் வள்ளலார் இளமையிலே தம் கடுக்கனைக் கழற்றாமல் கழற்றிக் கொள்ளச் செய்தவர் என்பது விளங்கும்.

பற்றற்ற துறவோர் ஓடும் செம்பொனும் ஒப்பவே நோக்கும் இயல்பினர் என்பர். வள்ளலார் காசைக் கருதவில்லை. காதுக் கடுக்கனைக் கழற்றிக்கொள்ள உதவினார். இவற்றை நோக்க,

“யாதனின் யாதனின் நீங்கியான் நோதல் அதனின் அதனின் இவன்"

என்னும் குறள் விளக்கமே இவையெனப் புலனாம். எவ்வெவற்றை வேண்டாவென விடுகின்றாரோ அவ்வவற்றால் அவர்க்குத் துன்பில்லை என்னும் இக்குறளமைதி வள்ளலார் வாழ்வில் எத்தனையோ சான்றுகளுக்கு உறைவிடமாக இருப்பதாம். உருவுகண்டு எள்ளாமை

ஓரன்பர் தம் வீட்டுத் திருமணத்திற்கு வருமாறு வள்ளலாரை அழைத்திருந்தார். பெரும்பாலும் இத்தகு நிகழ்ச்சிகளுக்குச் செல்லுவதைத் தவிர்த்து வந்தவர் வள்ளலார். ஆங்குச் செலவிடப்படும் வீண் செலவுகளைக் கண்டித்தவரும், ஏழை எளியவர்களுக்கு உணவு தரும் ஒன்றே இத்தகு மங்கல நிகழ்ச்சி களில் முதன்மையானதாக இருக்க வேண்டும் என்றவரும் வள்ளலார்.எனினும் அன்பர் வேண்டுதலை ஏற்று ஆங்குச் சென்றார் வள்ளலார்.

திருமண வீட்டின் முன் வாயிலில் கட்டும் காவலும் மிக்கிருந்தது. ஏழை எளியவர்கள் உள்ளே புகாதவாறு தடுக்கப் படுவதையும், ஆடை அணிகளால் சிறந்தோர் வரவேற்று அழைக்கப்படுவதையும் கண்டார். அவர் உள்ளம் நைந்தது.